நரசிம்மராவ் ஆட்சிக்காக கொலை- சிபு கைது
டெல்லி:நரசிம்மராவின் ஆட்சியைக் காப்பாற்ற அவரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய மத்திய அமைச்சர் சிபுசோரன், இந்த லஞ்ச விவகாரத்தை வைத்து தன்னை மிரட்டிய உதவியாளரை கொலை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உம்மனா மூஞ்சியாகவே இருந்து கொண்டு எல்லாவிதமான அரசியல் தகிடுதித்தங்களும் செய்தவர் நரசிம்ம ராவ்.தன்னை எதிர்த்த தனது கட்சியின் எம்பிக்கள், அமைச்சர்கள் மீதே வழக்குப் போட்டவர். தன்னை வெளியில்இருந்து ஆதரித்த ஜெயலலிதாவை கண்ட்ரோலில் வைக்க, அவர் தவறு செய்யும்போதெல்லாம் சுப்பிரமணியம்சுவாமி மூலம் வழக்கு மேல் வழக்காகப் போட்டு கலங்கடித்தார். இதற்காக சுவாமிக்கு கேபினட் அந்தஸ்தில் ஒருபதவியும் தந்தார்.
சிபிஐ ரெய்டுகள், அமலாக்கப் பிரிவு ரெய்டு, வருமான வரித்துறை ரெய்ட் என ஒவ்வொரு கட்சியையும் ஒருவகையில் மடக்கிப் போட்டு ஆண்டார். தனது ஆட்சியைக் காப்பாற்ற 4 எம்பிக்களின் ஆதரவு தேவை என்றஅவசியம் வந்தபோது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு விலை பேசினார்.
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு ஆர்டர் போட்டு, பணம் திரட்டி, அதை சிபு சோரனுக்குத் தந்து அவரதுகட்சியின் எம்பிக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியில் தொங்கிக் காட்டினார் ராவ்.
சிக்கல் ஆசாமி சிபு சோரன்:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பிக்களுக்கு தலா ரூ. 4 கோடி வரை நரசிம்ம ராவ் கொடுத்தார்.
இந்தப் பணப் பட்டுவாடா குறித்து முதலில் சிபு சோரனின் உதவியாளரான சசிநாத் ஜாவுக்குத் தெரியவில்லை.ஆனால் பின்னர் இது தெரிய வந்தபோது, தனக்கும் பங்கு தர வேண்டும், இல்லாவிட்டால் இந்த லஞ்சத்தைபகிரங்கப்படுத்தி விடுவேன் என அவர் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து ஜாவுக்கு 15 லட்சம் ரூபாயை சோரன் கொடுத்துள்ளார். இதை வைத்து அவர் டெல்லியில் ஒருநிறுவனத்தை ஆரம்பித்தார் ஜா. ஆனால் அதில் நஷ்டம் ஏற்படவே மறுபடியும் சோரனிடம் பணம் கேட்டுள்ளார்.அடிக்கடி இவ்வாறு கேட்டு நச்சரித்ததால், கடுப்பான சோரன், ஜாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
இதையடுத்து பிஸ்கா என்ற இடத்தில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு ஜாவரவழைக்கப்பட்டார். விருந்துக்குப் பின்னர் நந்து உள்ளிட்டோர் ஜாவை அருகே உள்ள காட்டுக்கு அழைத்துச்சென்று கொலை செய்து அங்கேயே புதைத்தனர்.
இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. ராஞ்சியில், பிஸ்கா என்ற இடத்தில் சசிநாத்ஜாவின் மண்டை ஓடு கைப்பற்றப்பட்டது.
அந்த மண்டை ஓடு ஜாவினுடையதுதான் என்பது தடயவியல் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்துசிபு சோரன், நந்து, சைலேந்திர பட்டச்சார்யா, பசுபதி நாத் மேத்தா, அஜய்குமார் மேத்தா, சுனில்கார்வாரே,ஆஷிஷ் தாக்கூர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மீது சிபிஐ குற்றச்சாட்டுகளை நிரூபித்துக் காட்டியது. இதையடுத்து நீதிபதி கேடியா நேற்று தீர்ப்புவழங்கினார். இதில், சிபுசோரன் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அவர்கள் மீதானகடத்தல், கொலை சதிச் செயல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார்.
கார்வாரே, ஆசிஷ் தாக்கூர் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பைத் தொடர்ந்து சிபுசோரன்உடனடியாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு போன பின்னர் தனக்கு நெஞ்சுவலிப்பதாக சோரன் கூறியதால், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இப்போது அவர் உடல் நிலைநன்றாக இருப்பதாக மருத்துவமனை கூறிவிட்டது. இதனால் விரைவில் சிறைக்கு அவர் ஷிப்ட் செய்யப்படுவார்.
சிபு சோரன் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட மறு நிமிடமே அவரைஉடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்துதனது ராஜினாமா கடிதத்தை சோரன் அனுப்பி வைத்தார். அதை ஏற்ற பிரதமர், குடியரசுத் தலைவருக்கு அதைபரிந்துரைத்து அனுப்பி வைத்தார். ஜனாதிபதியும் உடனே அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுவிட்டார்.
சிபு சோரன் மீது, ஆரம்பத்திலிருந்தே பல்வேறு வழக்குகள் உண்டு. இதை மத்திய ஆட்சியில் முதல் முறையாகசோரன் அமைச்சராக இருந்தபோது, 1980ம் ஆண்டில் தொடரப்பட்ட ஒரு கொலை வழக்கில், அவருக்கு எதிராகஜாமீனில் வெளி வர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தலைமறைவான சோரன், தனதுஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மீண்டும் அமைச்சர் ஆனார். இப்போது மீண்டும் கொலைகேசில் கைதாகியிருக்கிறார்.
ஸ்தம்பித்தது நாடாளுமன்றம்:
கொலை வழக்கில் மத்திய அமைச்சராக இருந்த சிபு சோரன் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கலக்கியது.இதனால் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
லோக்சபா இன்று காலை கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி எழுந்து, சிபு சோரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரினார். ஆனால் இப்போது இதுகுறித்து பேச முடியாது. பிற்பகல் 12 மணிக்குஅனுமதிப்பதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறினார்.
இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களும் சேர்ந்து குரல்கொடுத்தனர். இதனால், அவையில் பெரும் அமளி நிலவியது.
இதையடுத்து பிற்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார் சபாநாயகர். இதே காரணத்திற்காக ராஜ்யசபாவும் பிற்பகல் வரைஒத்திவைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications