ஆசிரியர் மீது மாணவிகள் பொய் செக்ஸ் புகார்?
சென்னை:தண்டையார்பேட்டை பள்ளி ஆசிரியர் மீது கொடுக்கப்பட்ட செக்ஸ் புகார் பொய்யானது என மாணவியின் தாய்செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி உண்மையை அறியுமாறுபோலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும்பாத்திமா என்ற மாணவியும், மேலும் பல மாணவிகளும் தாங்களை ஆசிரியர் சுப்புராஜ் தினமும் எங்களுக்குசெக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறார். அவருக்கு உதவியாக ஆசிரியை விஜயா இருக்கிறார் என போலீசில் புகார்கொடுத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் ஆசிரியர் சுப்புராஜ் முன்ஜாமீன் கேட்டு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவர் மனுவில் 13 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். என் மீது சில ஆசிரியர்கள்வேண்டுமென்றே புகார் செய்ய திட்டமிட்டு, மாணவிகள் மூலம் புகார் செய்துள்ளனர். என் மீது பொய் வழக்குபோடப்பட்டுள்ளது. எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பெரிய கருப்பையா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில்திருப்பமாக மாணவி பாத்திமாவின் தாய் ரமீஜா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எனது மகள்பாத்திமா, ஆசிரியர் மீது புகார் கொடுத்த சம்பவம் அறித்து அவளிடம் விசாரித்தேன். அதற்கு அவள் அப்படி ஒருசம்பவம் நடக்கவே இல்லை என கூறினாள்.
பள்ளியில் சில ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில், எனது மகள் மூலம் இந்த புகாரைகொடுத்துள்ளனர். இந்த புகார் தொடர்பான செய்தி பத்திரிக்கையில் வெளிவந்ததால் எனது மகளின் பெயர்பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சுப்புராஜ் மீது எனது மகள் கொடுத்த புகார் உண்மையல்ல என அந்த மனுவில்அவர் கூறியுள்ளார்.
இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும் என நீதிபதிபோலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications