மகாராஷ்டிராவில் பெரும் கலவரம்-ஊரடங்கு
மும்பை:மகாராஷ்டிர மாநிலம் கான்பூரில் அண்ணல் அம்பேத்கரின் சிலைசேதப்படுத்தப்பட்டதை எதிர்த்து தலித்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாகமாறியது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 வயது சிறுவன் பலியானான்.நூற்றுக்கணக்கான பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதையடுத்து தலித் மக்களின் போராட்டம் மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் பரவிவருகிறது.
கான்பூரில் அம்பேத்கர் சிலையை சில விஷமிகள் செவ்வாய்க்கிழமைசேதப்படுத்தினர். இதையடுத்து கான்பூரில் தலித்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில்குதித்தனர். இப்போராட்டம் இன்று பெரும் கலவரமாக வெடித்தது. மகாராஷ்டிரமாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கலவரம் பரவியதால் பெரும் பரபரப்புநிலவுகிறது.
இன்று போராட்டக்காரர்கள் புனேவுக்கும், மும்பைக்கும் இடையே ஓடும் டெக்கான்குயின் ரயிலை நிறுத்தி அதற்கு தீ வைத்தனர். இதில் ஐந்து பெட்டிகள் முற்றிலும்எரிந்து நாசமாகின. ஆனால் இதில் யாரும் காயமடையவில்லை.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் பரவியுள்ளதால் இயல்பு நிலைபாதிக்கப்பட்டுள்ளது. நாசிக் நகரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநகரகாவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
வகோலா என்ற இடத்தில் ஒரு கும்பல் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தைநிறுத்தியது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி சுட்டும்கும்பலைக் கலைத்தனர்.
மும்பையிலும் கலவரம் பரவியுள்ளது. ஒர்லி பகுதியில் இன்று காலை போராட்டங்கள்நடந்தன.10 பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. கான்பூர் சம்பவத்தைக் கண்டித்து சிலதலித் அமைப்புகள் நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
மும்பை நகரின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. முலுந்த்,பெந்தப், நவ்கர், செம்பூர், குரார், ஒர்லி, கஞ்சூர் மார்க் ஆகிய பகுதிகளில் கல்வீச்சுசம்பங்களும், சாலை மறியல் சம்பவங்களும் நடந்துள்ளன.
புனேவிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. புனேநகரின் 14 பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் கல்வீச்சிலும், தீவைப்பிலும்சேதமடைந்தன. நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதால் மத்தியபடைகளின் உதவியையும் மாநில அரசு கோரியுள்ளது.
பிம்ப்ரி பகுதியில் நடந்த கல்வீச்சில் 2 போலீஸார் காயமடைந்தனர். ஸ்வர்கேட்பகுதியில் நடந்த வன்முறையில் 2 டிரைவர்கள் காயமடைந்தனர். வன்றையில்ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தானே மாவட்டத்திலும் கலவரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒளரங்கபாத் நகரில்1000க்கும் மேற்பட்டோர் கூடி குந்தவாடி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர்.அவர்களை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கலைத்தனர்.
அதே போல குஜராத்திலும் இந்த வன்முறை பரவியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications