சங்கரராமன் கொலை வழக்கு-தி.க. போராட்டம்
சென்னை:காஞ்சி சங்கராச்சாரியார்கள் சம்பந்தப்பட்ட சங்கரராமன் கொலை வழக்கை விரைவாகநடத்தக் கோரி கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர் சென்னையில்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலைசெய்யப்பட்ட வழக்கில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையசங்கராச்சாரியார் விஜயேந்திரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போதுஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்த வழக்கு தற்போது புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.வழக்கு புதுச்சேரிக்கு வந்தும் கூட இன்னும் விசாரணை தொடங்காமல் உள்ளது.முதலில் போலீஸ் தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராக புதுச்சேரிவழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் தமிழக வழக்கறிஞர்களேஆஜராகலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது ஜெயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட ஒரு மனு உச்சநீதிமன்றத்தில்நிலுவையில் இருப்பதால் வழக்கு விசாரணை தொடங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், வழக்கை விரைவாக நடத்தி முடிக்கக் கோரி தி.க. சார்பில்சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தி.க. தலைவர் கி.வீரமணிதலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், முக்கியமானஇந்த வழக்கை தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications