பெட்ரோல், டீசல் விலை குறைந்தது
சென்னைபெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் பதவிக்கு வந்த பிறகு பலமுறை பெட்ரோலியப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. விலை உயர்வு கடுமையாக இருந்ததால் அத்தியாவசியப் பொருட்களின்விலையும் கடுமையாக உயர்ந்தது. காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.
இந்த நிலையில் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை பெருமளவில் குறைந்ததால் உயர்த்தப்பட்டபெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக அரசுநடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என இடது சாரிக் கட்சிகள் மத்திய அரசைஎச்சரித்தன.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலையீட்டால், பெட்ரோலியப் பொருட்களின் விலையைஓரளவுக்குக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும் குறைக்க முடிவுசெய்யப்பட்டது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ. 49.67க்கு (முன்பு ரூ. 51.83) விற்கப்படுகிறது. டீசல்லிட்டருக்கு ரூ. 34.41க்கு (முன்பு 35.51) விற்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பால்அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கணிசமாக குறையும், பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கும்என்றார்.
விலை குறைப்பை இடதுசாரிக் கட்சிகளும் வரவேற்றுள்ளன. இருப்பினும் கடந்த காலங்களில் உயர்த்தியதில்பாதியளவுக்குத்தான் தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவை தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications