வருமான வரி வழக்கு: ஜெ-சசி மனுக்கள் தள்ளுபடி
சென்னை:வருமான வரி வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரதுஉயிரினும் மேலான தோழி சசிகலாவும் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது.
1991ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை இந்த இருவரும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாததைஎதிர்த்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது.
மேலும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பாகவும்ஜெயலலிதா, சசி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில், ஜெ, சசி ஆகியோர் தாக்கல்செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இருவரும்அப்பீல் செய்தனர்.
இந்த அப்பீல் மனு விசாரணையில் இருந்ததால் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே போனது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தக் கோரி வருமான வரித்துறை உச்ச நீதிமன்றத்தில்வழக்குப் போட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையை விரைந்து முடிக்கஉத்தரவிட்டது.
இதற்கு வசதியாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த ஜெயலலிதா, சசிகலாவின் மனுவை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் விரைந்து நடத்தி முடித்து இன்று தீர்ப்பை வழங்கினார்.
ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் இருவர் மீதான விசாரணையும் மீண்டும் தொடங்கும்.












Click it and Unblock the Notifications