ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதிரடி குழுக்கள்
சென்னை:தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களைக் கண்டறிந்துஅவற்றை மீட்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்களை அமைத்து முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்திருப்போரைகண்டறிந்து அவற்றை காலி செய்யும் பணிக்காக மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர் தலைமையில் ஐந்து பேர்கொண்ட குழுக்கள் அமைக்கப்படும். மாவட்ட எஸ்.பி, பொதுப்பணித்துறை மாவட்ட அளவிலான சம்பந்தப்பட்டநீர் வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர், வனத்துறைமாவட்ட வன அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஏரிகள், அரசு நிலங்களை ஆக்கிரமித்திருப்போரை கண்டறிந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும்நடவடிக்கையில் இந்தக் குழுக்கள் ஈடுபடும். மாதம் ஒருமுறை கூடி தங்களது செயல்பாடுகளை இக்குழு ஆராயும்.
மாவட்ட குழுக்களின் செயல்பாடுகளை மாநில அளவில், நில நிர்வாக சிறப்பு ஆணையர் ஆய்வு செய்வார்.இதேபோல மாநில அளவில் வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இந்தமாநில அளவிலான குழுவில், தலைமைச் செயலாளர், வருவாய், சுற்றுச்சூழல், வனம், ஊரக வளர்ச்சி, உள்துறை,பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் நில நிர்வாக துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தவிர தாம்பரம் திமக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பள்ளிப்பட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமன், ஆறுமாநகராட்சிகள் மற்றும் அம்பத்தூர், திருப்பூர் நகராட்சிகளிலிருந்து தலா ஒரு பிரதிநிதி ஆகியோர் இந்தக்குழுவில் அரசு சார்பற்ற உறுப்பினர்களாக இருப்பார்கள்.
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மாவட்ட அளவிலான குழுக்களின் பணிகளை கண்காணிப்பதுமாநில குழுவின் பணியாகும்.
மேலும், அரசு புறம்போக்கு நிலங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்திருப்பவர்களை காலி செய்வதுதொடர்பாகவும் இந்த மாநில அளவிலான குழு முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications