ஸ்டாலின் கைக்கு வரப்போகும் அந்த டிராப்ட்! கனிமொழி கேள்விக்கு காங்கிரஸின் பதில் எங்கே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டால், மீண்டும் தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர் ஆட்சியைத் திணிப்பார்கள். இத்தகைய ஆபத்துகள் இருப்பதால் தான், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்," என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவுகள் ஒருமுறை அறிவிக்கப்பட்டால், அவற்றை கோர்ட்டில் போய் சவாலுக்கு உட்படுத்த முடியாது. அதனால்தான் மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் டிராப்ட் கைக்கு வந்த பிறகே திமுக தனது தெளிவான முடிவை எடுக்க இயலும் என்று சொல்கிறார் மு.க.ஸ்டாலின்.

Stalin

தொகுதி மறுவரையறை ஆணையம்

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்பாக, தன்னுடைய கட்சியின் எம்பிக்களிடம் பேசும்போதுகூட, "தமிழ்நாட்டின் நலன் சார்ந்து மட்டுமே உங்களுடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்" என்றுதான் அவர் தெளிவாக சொன்னார். கடந்த தேர்தல் காலத்திலேயே இந்த தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்து, அதை தேசிய அளவில் பெரிய எதிர்ப்பாக வலுப்படுத்தியவரே ஸ்டாலின் தான்.

இன்றைக்கு திமுக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கார்த்தி சிதம்பரமும் ப.சிதம்பரமும் கதைகட்டி விடுகிறார்கள். ஆசைக்கு மயங்குவதற்கு திமுக ஒன்றும் சுயநல அரசியல் செய்யக்கூடிய கட்சி கிடையாது. திமுகவை விமர்சிப்பதற்கு காங்கிரஸாருக்கு எந்தவித யோக்கியதையும் தகுதியும் இல்லை. காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்தவொரு வாழ்வாதார உரிமை விவகாரத்திலும் ப.சிதம்பரம் என்றைக்காவது குரல் கொடுத்துப் பார்த்திருக்கிறீர்களா?

பாயிண்ட் டை பாயிண்ட் பேசிய கனிமொழி

திமுக என்பது தமிழ்நாட்டின் நலன், தமிழர் உரிமை மற்றும் தமிழ் மொழி போன்றவற்றை பாதுகாப்பதற்காகவே நிற்கக்கூடிய ஒரு கொள்கைப் பிடிப்புள்ள இயக்கம்... எந்த சூழலிலும் அது பாஜக பக்கம் போய் சாயாது... அப்படி சாய்ந்தால் அறிவாலயத்திற்குப் பூட்டு போட்டுவிட்டு திமுக முடிந்துபோச்சு என்று அறிவிக்க வேண்டியதுதான். அது திமுககாரர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

நாடாளுமன்றத்தில் எந்தவொரு அவசரச் சட்டத்தின் வரைவு கைக்கு வந்தாலும், அதை அரை மணி நேரத்தில் படித்துப் புரிந்துகொண்டு, பாயிண்ட் பை பாயிண்ட்டாக எதிர்த்துப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்த எம்பிக்களான கனிமொழியும் ஆ.ராசாவும் திமுகவில் இருக்கிறார்கள். அன்றைக்கு கனிமொழிக்கு யாராலாவது பதில் சொல்ல முடிந்ததா?

காங்கிரஸ், ராகுல் காந்தி

அதனால் நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்தோ அல்லது சட்ட வரைவுகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தோ இந்த காங்கிரஸ்காரர்கள் திமுகவுக்கு வந்து கற்றுத்தர வேண்டிய அவசியமே கிடையாது.

அதேபோல, "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற திட்டம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மாநிலங்களின் தன்னாட்சி உரிமைக்கும் முற்றிலும் எதிரானது என்பதால் தான் ஸ்டாலின் அதனை திட்டவட்டமாக எதிர்த்தார். இன்றைக்கு பேசும் ராகுல் காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் பேசுவதற்கு முன்பே, முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தின் ஆபத்துகளை உணர்ந்து நாளிதழ்களில் கட்டுரையே எழுதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டார்.

ஸ்டாலின் ஏன் எதிர்த்தார்

இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு வந்தால், மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்கள் எல்லாம் பிடுங்கப்பட்டு, மத்திய அரசின் ஆதிக்கம் மட்டுமே ஓங்கும் சூழல் உருவாகும். தேசிய அளவிலான அரசியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு, மாநிலங்களின் தனித்துவமான கோரிக்கைகளும் உள்ளூர் மக்களின் பிரச்சனைகளும் கண்டுகொள்ளப்படாமல் போய்விடும்.

ஒருவேளை மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டால், மறுபடியும் தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர் ஆட்சியை திணிப்பார்கள். இத்தகைய ஆபத்துகள் இருப்பதால்தான், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்" என்றெல்லாம் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் விவரிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+