பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; கரூரில் பீதி

Subscribe to Oneindia Tamil

கரூர்:கரூரில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும்,தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வதந்திபரவியதால், அங்கு பெரும் பீதி நிலவியது.

இந்த வதந்தியால் கரூர் நகரமே இன்று பெரும் பரபரப்பிலும், பீதியிலும் மூழ்கியது.இன்று காலை ஆண்டான் கோவில் என்ற இடத்தில் உள்ள செயின்ட் அந்தோணிமெட்ரிகுலேஷன் பள்ளிக்கு ஒரு தொலைபேசித் தகவல் வந்தது.

அதில் பேசிய நபர் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எப்போதுவேண்டுமானாலும் வெடித்து சிதறும் எனக் கூறியுள்ளார். இதனால் பள்ளியில்பரபரப்பு ஏற்பட்டது.

இந்தத் தகவல் வெளியிலும் பரவவே, மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குவிரைந்து வந்து தங்களது குழந்தைகளை வெளியே அனுப்புமாறு கோரினர். ஆனால்வெடிகுண்டு எதுவும் இல்லை, அது சாதாரண வதந்திதான் என்று ஆசிரியர்கள் கூறியும்பெற்றோர்கள் கேட்காமல் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச்சென்றனர்.

போலீஸாரும், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்களும் சுமார் ஒரு மணி நேரம்சோதனை போட்டும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த நிலையில்,வெண்ணைமடை என்ற இடத்தில் உள்ள சேரன் உயர் நிலைப் பள்ளி மற்றும்ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள சேரன் தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் தீவிபத்துஏற்பட்டு விட்டதாக இன்னொரு வதந்தி பரவியது.

இதையடுத்து இந்தப் பள்ளிக்கூடங்களுக்கு பெற்றோர் அலறி அடித்து ஓடினர். அங்குபோனபோது தீவிபத்து ஏற்படவில்லை என்பதை அறிந்தனர். இருந்தாலும் மனசுசரியில்லை என்று கூறி பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வதந்திகளால் இன்று கரூர் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.இப்படிப்பட்ட வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என வதந்தியால் பள்ளிகளுக்கு அலைக்கழிக்கப்பட்ட பெற்றோர்கள் குமுறலோடுதெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+