2 விமானங்கள்..100 பேர்..ஜெ டெல்லி பயணம்
சென்னை:டெல்லியில் நாளை நடைபெறவுள்ள எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் 100 பேர் இன்று இரு விமானங்கள் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில்அதிமுகவினர் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க 2 விமானங்களில் அதிமுகவினர் இன்று புறப்பட்டு சென்றனர். அதிமுக மாவட்டசெயலாளர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 29 பேர் காலை 6.40 மணிக்கு விமானத்தில்புறப்பட்டுச் சென்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகல் 1.30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்பட்டார்.அவருடன் எம்எல்ஏக்கள் அனைவரும் சென்றனர். அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், பிற மாநில அதிமுகசெயலாளர்கள் ஆகியோரும் புறப்பட்டு சென்றனர்.
டெல்லியில் அதிமுகவினர் 100 பேரும் ஹோட்டல்களிலும், தமிழக அரசு விருந்தினர் மாளிகையிலும் இன்றுஇரவு தங்குகிறார்கள். நாளை காலை சிலை திறப்பு விழா முடிந்ததும் 100 பேரும் நாளை மாலை விமானம் மூலம்சென்னை திரும்புகிறார்கள்.
இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர், சோனியாகாந்திக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்திருக்கும்நிலையில் அவர்கள் நாளை சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வது குறித்து இன்னும் உறுதியான அறிவிப்புவரவில்லை.
நாளை மறுதினம் மறைந்த முரசொலி மாறனின் சிலை திறக்கப்படுகிறது. இதற்காக நாளை முதல்வர் கருணாநிதிடெல்லி செல்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications