சங்கரராமன்-குற்றவாளிக்கு அரிவாள் வெட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சங்கரராமன் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை தயார் செய்து நீதிமன்றத்தில ஆஜர்படுத்திய மீனாட்சிசுந்தரத்தை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டித் தள்ளியது. இதில் படுகாயமடைந்தமீனாட்சி சுந்தரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரபரப்பான சங்கரராமன் கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறிக் கொண்டிருந்தபோது,சென்னை நீதிமன்றத்தில் சிலர் சரணடைந்து, நாங்கள்தான் குற்றவாளிகள் என கூறி வாக்குமூலம் கொடுத்தனர்.ஆனால் போலீஸ் விசாரணையில் இவர்கள் போலி குற்றவாளிகள் எனத் தெரிய வந்தது.

இந்த போலி குற்றவாளிகளை ஏற்பாடு செய்ததாக மீனாட்சி சுந்தரம் என்ற ரவுடி கைது செய்யப்பட்டான்.இவ்வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ளான் மீனாட்சி சுந்தரம். இவனது வீடு சென்னை எம்.ஜி.ஆர். 31வதுதெருவில் உள்ளது. நேற்று இரவு அப்பகுதியில் உள்ள மார்க்கெட் அருகே மீனாட்சி சுந்தரம் நடந்து சென்றுகொண்டிருந்தான்.

அப்போது 10 பேர் கொண்ட கும்பல் ஒரு வாகனத்தில் வந்து மீனாட்சி சுந்தரத்தை வளைத்து நிறுத்தியது. பின்னர்அக்கும்பலில் இருந்தவர்கள் சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளினர். இதில் படுகாயமடைந்த மீனாட்சிசுந்தரம் ரத்த வெள்ளத்தில் விழுந்தான்.

தகவல் அறிந்ததும் மீனாட்சி சுந்தரத்தின் மனைவி செல்லம்மாள் விரைந்து வந்தார். அக்கம் பக்கத்தினரின்உதவியுடன் மீனாட்சி சுந்தரத்தை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மீனாட்சி சுந்தரம்அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டான்.

மீனாட்சி சுந்தரத்தின் உயிர் ஊசலாடி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர். நகர் போலீஸார் விசாரணை நடத்தி கும்பலைத் தேடி வருகின்றனர்.

மீனாட்சி சுந்தரம் இன்று புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் சங்கரராமன் வழக்கில் ஆஜராகவேண்டும். இந்த நிலையில் அவர் வெட்டப்பட்டுள்ளான்.

இது தொடர்பாக எம்ஜிஆர் நகர் போலீசார் நடத்திய விசாரணையில் சங்கரராமன் கொலைக்கான கூலிப் பணத்தைபங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் தான் மீனாட்சி சுந்தரத்தை கொல்ல முயற்சி நடந்தது தெரிய வந்துள்ளது.

இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் இதே போல் மீனாட்சி சுந்தரத்தை கொல்ல முயற்சி நடந்ததுள்ளது. இதுதொடர்பாக 9 பேரை போலீஸார் அப்போது கைது செய்தனர். இதில் இரண்டு பேர் தற்போது ஜாமீனில்விடுதலையாகியுள்ளனர். அவர்கள் மீனாட்சி சுந்தரத்தை தாக்கி இருக்கலாம் என்று போலீசார்சந்தேகப்படுகின்றனர்.

இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கூலிப் படைத் தலைவன் அப்பு சமீபத்தில்தான்ஜாமீனில் விடுதலையாகி வந்து உயர்நீதிமன்ற நிபந்தனைப்படி அவர் கிருஷ்ணகிரியில் தங்கியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+