பாபர் மசூதி: லோக்சபாவில் பெரும் அமளி
டெல்லி:மக்களவையில் இன்று பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக நடந்த சூடான விவாதத்தால் அமளி நிலவியது.இதையடுத்து பிற்பகல் 12 மணி வரைக்கும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 14வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று காலை மக்களவைகூடியதும்,பாஜக மற்றும் சிவசேனை உறுப்பினர்கள் எழுந்து, ஜெய் ஸ்ரீராம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்,அப்சலை தூக்கிலிடு என கோஷமிட்டனர்.
இதற்கு காங்கிரஸ், சமாஜவாடி, இடது சாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும்இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால் சபையை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணி வரை சபையை ஒத்திவைத்து வெளியேறினார் சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி.
சபாநாயகர் கூட்டத்தைப் புறக்கணிக்க தேஜகூ. முடிவு:
இதற்கிடையே, சபையை நடத்துவதில் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பாரபட்சமான அணுகுமுறையைக்கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, சபாநாயகர் கூட்டும் கூட்டங்களையும்,அலுவல்ஆய்வுக் குழுக் கூட்டங்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
மக்களவை ஒத்திவைக்கப்பட்டவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்தது.இக்கூட்டம் குறித்து பாஜக எம்.பி. வி.கே.மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவையைசபாநாயகர் நடத்தும் விதம் சரியில்லை. பாரபட்சமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினை தீரும் வரைசபாநாயகர் கூட்டும் கூட்டங்களையும், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டங்களையும் புறக்கணிக்கதீர்மானித்துள்ளோம்.
எதிர்க்கட்சிகளிடம் சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். இரட்டை நிலையை அவர் கடைப்பிடிக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சபையில் பிரச்சினை எழுப் முயன்றால் அதை அனுமதிக்க மறுக்கிறார்சபாநாயகர்என்றார் மல்ஹோத்ரா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications