பாபர் மசூதி தினம்: முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினமான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு முஸ்லீம்கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் மசூதியை அதே இடத்தில் கட்டக் கோரி ஆர்ப்பாட்டம்செய்தனர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 18வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்றுஅனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் முஸ்லீம் கட்சிகள், அமைப்புகளின் சார்பில்ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள்நடத்தப்பட்டன.
தமிழகத்திலும் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும்பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடியேற்றுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
சென்னையில் தமிழக தெளஹீத் ஜமாத் சார்பில் அதன் தலைவர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் அந்தஅமைப்பினர் முழக்கப் போராட்டத்தை நடத்தினர்.அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு மீண்டும் பாபர்மசூதியை கட்ட வேண்டும். மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரிபோராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
தமிழகம் முழுவதும் 32 இடங்களில் இந்த முழக்கப் போராட்டம் நடைபெற்றதாக அமைப்பின் மாநில செயலாளர்முகம்மது முனீர் தெரிவித்துள்ளார்.இதேபோல தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது.
அக்கட்சியின் கொடிக் கம்பங்களில் இன்று முழுவதும் கருப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. சென்னையில்அக்கட்சியின் தலைவர் ஹைதர் அலி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, லிபரான் கமிட்டியின்பரிந்துரைகளை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மசூதி இருந்த இடத்தைமுஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதேபோல இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் பஷீர் அகமது தலைமையில் சென்னைஉள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்தது.போராட்டத்தில் கலந்து கொண்ட பஷீர் அகமது கூறுகையில், மசூதி இருந்த இடத்தை முஸ்லீம்களிடம்ஒப்படைப்பதோடு, மசூதியையும் மத்திய அரசு கட்டிக் கொடுக்க வேண்டும்.
இதை செய்ய மத்திய அரசு தவறினால் நாடு முழுவதும் முஸ்லீம்களைத் திரட்டி, செங்கோட்டையைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications