ஆந்திரா: ராவ் வெற்றி-பாஜக டெபாசிட் காலி
ஹைதராபாத்:ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கோரி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து மீண்டும்போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் மாபெரும் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் பாஜக டெபாசிட் இழந்து கேவலமான தோல்வியை சந்தித்துள்ளது.ணாணூ
கடந்த மக்களவைத் தேர்தலில் கரீம்நகர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராவ், தனி தெலுங்கானாமாநிலத்துக்காக போராடி வருகிறார். ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா அமைப்பதாக மத்திய காங்கிரஸ்கூட்டணி அரசு உறுதியளித்தது. இதையடுத்து மத்திய கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தார் ராவ், மத்தியஅமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
ஆனால், காங்கிரஸ் தனது வேலையைக் காட்டியது. தனி மாநிலம் எல்லாம் கிடையாது என்றது. இதையடுத்துதனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராவ்.
எம்பி பதவியையும் ராஜினாமா செய்யத் தயாரா என காங்கிரசும், பாஜகவும், தெலுங்கு தேசமும் சவால் விட்டன.இந்த சவாலை ஏற்ற ராவ் எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து கடந்த 4ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் ராவ் மீண்டும் களம் இறங்கினார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஜீவன் ரெட்டியும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரானவித்யாசங்கர் ராவும் போட்டியிட்டனர். முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்சார்பில் ராமண்ணாவும் போட்டியிட்டனர்.
இதில் சந்திரசேகர ராவ் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இரண்டாவது இடத்தைகாங்கிரஸ் வேட்பாளர் பிடித்தார்.
மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 3வது இடமே கிடைத்தது.
பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சரான வித்யாசங்கர் ராவுக்கு டெபாசிட் கூடகிடைக்கவில்லை. மிக சொற்ப வாக்குகளையே பெற்ற அவர் டெபாசிட் இழந்து படு தோல்வியடைந்தார்.
இதன் மூலம் தெலுங்கான பகுதி மக்கள் தனி மாநில கோரிக்கைக்கு மீண்டும் பெரும்பான்மையான ஆதரவுதெரிவித்துள்ளது உறுதியாகியுள்ளது. இப்போதைய வெற்றி மூலம் தனி மாநில கோரிக்கையை வைத்து தனதுபோராட்டத்தை ராவ் தீவிரமாக்குவார் என்று தெரிகிறது.
பொப்பிலி தொகுதியில் காங். வெற்றி:
இந் நிலையில் ஆந்திராவில் பொப்பிலி நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிவென்றுள்ளது. சுமார் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தெலுங்கு தேசம் வேட்பாளர் தோற்றார்.
இங்கும் பாஜக வேட்பாளர் டெபாசிட் இழந்தார். இந்தத் தொகுதியில் 6 முறை தெலுங்கு தேசமே தொடர்ந்துவென்று வந்தது. இம் முறை தான் முதன் முறையாக காங்கிசிடம் தோற்றுள்ளது.
சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது அவருடன் கூட்டணி வைத்த பாஜக ஆந்திராவில் படுவேகமாக வளர்ந்தது.ஆனால், மத்தியில் பாஜக தோற்றவுடன் அக் கட்சியுடனான கூட்டணியை நாயுடு முறித்துக் கொண்டார்.
இந் நிலையில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழந்துள்ளது அக் கட்சியை கலங்கடித்துள்ளது.












Click it and Unblock the Notifications