அழகிகளிடம் விழுந்து வீழ்ந்த யோபு
சென்னை:தனது பெண்ணாசையால் பண மோசடியில் ஈடுபட்டு சீரழிந்து போனதாக இலவச வீடு கட்டுத் திட்ட மோசடியில்ஈடுபட்டு கைதாகியுள்ள போலி பிஷப் யோபு சரவணன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வேலூரைச் சேர்ந்தவர் யோபு சரவணன். இவர் வேலூரிலும், சென்னை முகப்பேரிலும் கல்வாரி மிஷன் சர்ச் என்றபெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் இலவச வீடு கட்டும் திட்டத்தை அறிவித்தார் யோபு.
இந்தத் திட்டத்தைக் கேள்விப்பட்டு இந்த அறக்கட்டளையை அணுகிய நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம்ஆர்டர் உங்களுக்குத்தான் என்று ஆசை வார்த்தை கூறி பல கோடி பணத்தை சுருட்டியது யோபு மற்றும் அவரதுகும்பல்.
இந்த நிலையில்தான் இதை விட பெரிய அளவில் மோசடி செய்து தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, கேரளாபோன்ற வெளிமாநிலங்களிலும் ஏராளமான காண்டிராக்டர்களை மோசடி செய்து பல கோடி பணத்தை சுருட்டியபோலி பிஷப் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார்.
ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து யோபுவிடம் பணம் கொடுத்து ஏமாந்த காண்டிராக்டர்கள்சென்னையை முற்றுகையிட்டு பணத்தைத் திருப்பிக் கேட்டனர். ஆனால் யோபு தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் யோபுவைத் தேடி வந்தனர். நீண்டதலைமறைவுக்குப் பின்னர் தற்போது யோபு போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீஸார் யோபு செய்த மோசடிகள் குறித்துகேட்டறிந்துள்ளனர். போலீஸ் விசாரணையின்போது தனது கைப்பட எழுதி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் யோபுகூறியிருப்பதாவது:
நான் சேலம் மாவட்டம் மேட்டூரில் பிறந்தவன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம்தான். எனது தந்தை பெயர்ஜெயராமன், தாயார் பெயர் ஆண்டாள். எனக்கு பத்மாவதி என்ற தங்கையும், ஆனந்தன், ரமேஷ் என இருதம்பிகளும் உள்ளனர்.
எனது தந்தை சம்பாதித்து கொண்டு வந்த பணத்தில்தான் நாங்கள் அனைவரும் ஜீவனம் நடத்தி வந்தோம். அவர்மேட்டூரில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
வீட்டில் வசதி இல்லாததால் நான் 9வது வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இந்த நிலையில் எனதுதங்கைக்குத் திருமணத்தை முடித்து விட்டு எனது தந்தை விருப்ப ஓய்வு பெற்று விட்டார். குடும்பத்தில் வறுமைதாண்டவமாடியது.
இதையடுத்து எனது தங்கை கணவரின் ஆலோசனைப்படி நாங்கள் அனைவருக்கும் சென்னைக்கு இடம்பெயர்ந்தோம். 1994ம் ஆண்டு சென்னைக்கு நாங்கள் வந்தோம். மந்தைவெளியில் ஒரு வாடகை வீட்டில்குடியேறினோம்.
ரிலையன்ஸ் கேஸ் ஏஜென்சீஸ் நிறுவனத்தில் நான் மெக்கானிக் வேலையில் சேர்ந்தேன். மாதம் ரூ. 350 மட்டுமேசம்பளம் கிடைத்தது. இதனால் விரக்தி அடைந்த நான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். ஆனால் அன்றுஇரவு எனது கனவில் இயேசு நாதர் தோன்றினார்.
மகனே கவலைப்படாதே, என்னைப் பின்பற்றி வா, நான் உன்னை உயர்த்துகிறேன் என்று அவர் கூறினார்.இதனால் மனம் மாறிய நான் மதமும் மாறி கிறிஸ்துவராக மாறினேன்.
மெட்ராஸ் ஜெப கோபுரம் என்ற கிறிஸ்தவ அமைப்பில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு பிலாஸபியில் டிப்ளமோமுடித்தேன். பின்னர் கிறிஸ்துவப் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்.
இந்த சமயத்தில்தான் பாதிரியார் ஜெயசீலனை சந்தித்தேன் (இவரும் மோசடியா வீடு கட்டும் திட்டத்தைஅமல்படுத்தி சில காலத்திற்கு முன்பு போலீஸில் சிக்கியவர்). அவர் பிஷப் ஆனந்தராஜிடம் சில காலம் வேலைபார்த்தவர். ஆனந்தராஜ் இலவச வீடு கட்டும் மோசடித் திட்டத்தை செய்து பெரும் பணம் சம்பாதித்து வந்தார்.அவரைப் போலவே சத்யசீலனும் மோசடியில் ஈடுபட்டு சம்பாதித்தை அறிந்தேன்.
இந்த இடத்தில்தான் நான் பாதை மாற ஆரம்பித்தேன். இவர்களைப் போல நாமும் மோசடி செய்து சீக்கிரம் பணம்சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்தேன். இதைத் தொடர்ந்து கல்வாரி சர்வதேச அறக்கட்டளை என்றபெயரில் வேலூர், முகப்பேரில் அறக்கட்டளை அலுவலகங்களைத் தொடங்கினேன்.
2004ம் ஆண்டு எனக்கு பிஷப் பட்டம் கிடைத்தது. அதன் பின்னர் மோசடித் தொழிலை தீவிரமாக்கினேன். பணம்கொட்டத் தொடங்கியது, அதே நேரத்தில் எனது குணமும் மாறி விட்டது.
1993ம் ஆண்டு முதல் மனைவியான சாந்தியைக் கல்யாணம் செய்தேன். அடுத்த வருடமே எனது அத்தைமகளான அமுதாவையும் திருமணம் செய்தேன். முதல் மனைவி மூலம் எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அமுதாமூலம் ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். அவர்களில் மகள் இறந்து விட்டாள். இப்போது அமுதா மீண்டும்கர்ப்பம் தரித்துள்ளார்.
1995ம் ஆண்டு முதல் மனைவியான சாந்தியின் அக்காள் மகள் மெர்சியை (இவர் யோபுவுக்கு மகள் முறையில்வருகிறார்!) கல்யாணம் செய்து கொண்டேன். மெர்சி மூலம் எனக்கு 3 குழந்தைகள்.
பண வரத்து அபரிமிதமாக அதிகரிக்கவும் எனது தொழிலை விஸ்தரித்தேன். தமிழகம் தவிர ஆந்திரா, கேரளா,கர்நாடக ஆகிய மாநிலங்களிலும் பெரிய அளவில் மோசடி செய்ய ஆரம்பித்தேன். பணத்தில் நான் நனையஆரம்பித்தேன். இதனால் சொகுசு கார்கள், பங்களாக்களை வாங்கிக் குவித்தேன்.
நான் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக் ஆனவன். கண்ணில் பட்ட பெண்களையெல்லாம் தொட வேண்டும் எனவிரும்புவேன். நான் நினைத்தது போலவே எனக்கும் பெண்கள் கிடைத்தார்கள். தொட்ட பெண்களையெல்லாம்கல்யாணமும் செய்து கொள்வேன். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக 3 பேரை மட்டுமே கல்யாணம்செய்துள்ளேன்.
இதுதவிர நடிகைகள், விபச்சாரப் பெண்களிடமும் உல்லாசமாக இருந்துள்ளேன். பெங்களூரில் ஒரு கன்னடநடிகையிடம் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. பெண்கள் விஷயத்திற்காக நான் மோசடியாக சம்பாதித்தபணத்தையெல்லாம் பெருமளவில் விட்டேன்.
பண ஆசை, பெண்ணாசையால் தவறான பாதைக்குப் போய் இப்போது தடம்புரண்டு நிற்கிறேன். தவறானபாதையைத் தேர்ந்தெடுத்ததால் அதற்கான தண்டனையை அனுபவிக்கிறேன்.
நான் மோசடி செய்து சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியை நான் நம்பியிருந்த புரோக்கர்கள் ஏமாற்றிப் பிடுங்கிவிட்டனர் என்று கூறியுள்ளார் யோபு.
இதற்கிடையே, யோபுவின் வீடுகள், அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ளபொருட்களையும், 2 இன்னோவா கார்களையும் சிபிசிஐடி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல, ரூ.13.7 லட்சம் பணத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விவரம்:
3 கலர் டிவிக்கள், 3 சிறிய கலர் டிவிக்கள், 4 டிவிடி பிளேயர்கள், ஒரு டிவிடி ஆடியோ பிளேயர், 2கம்ப்யூட்டர்கள், 2 பிரிண்டர்கள், கற்கள் பதிக்கப்பட்ட தங்கமுலாம் பூசியை தலையில் அணியும் பித்தளை கிரீடம்,தங்க முலாம் பூசிய பித்தளையிலான சிலுவையுடன் கூடிய தண்டம் ஆகியவை.
யோபு மற்றும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட மேலாளர் ராஜேந்திரன் இருவரும் நீதிமன்றதிதல்ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறைக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications