க்ரீமி லேயர் எல்லாம் இல்லை:பிற்பட்டோர் அனைவருக்கும் 27% இட ஒதுக்கீடு
டெல்லி:மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் க்ரீமி லேயர் பிரிவினரையும் சேர்த்து பிற்படுத்தப்பட்டஅனைவருக்கும் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது தொடர்பானமசோதா இந்த கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில்பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இதற்கு முற்பட்ட சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.இதையடுத்து பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரரீதியில் வசதி படைத்த "க்ரீமிலேயர் பிரிவினரை இட ஒதுக்கீட்டு சலுகையில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல்எழுப்பப்பட்டது.
மேலும் இட ஒதுக்கீட்டு கொள்கையில் இருந்து "க்ரீமி லேயர் பிரிவினரை நீக்குமாறுஉச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. க்ரீமி லேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடுதேவையில்லை என நாடாளுமன்ற நிலைக்குழுவும் சமீபத்தில் மத்திய அரசுக்குபரிந்துரை செய்தது.
ஆனால், இதற்கு திமுக, பாமக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.பிற்படுத்தப்பட்ட அனைவருக்கும், அவர்களது பொருளாதார நிலையை கருத்தில்கொள்ளாமல், இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று இந்தக் கட்சிகள் கோரின.
குறிப்பாக பாமக இந்த விஷயத்தில் கடுமையான நிலை எடுத்தது. மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கை நேரில் சந்தித்து தனது கோரிக்கையைபாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
மேலும் இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் அதைத்தடுக்க திமுக, லாலு பிரசாத் உள்ளிட்டோர் தவறி வருவவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந் நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், அர்ஜூன் சிங் ஆகியோரைசந்தித்து இட ஒதுக்கீடு விஷயத்தில் இனியும் தாமதம் காட்டாமல் உடனே சட்டமசோதா தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தினார். மேலும் க்ரீமி லேயரை நீக்கவும்எதிர்ப்புத் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் உள்ளிட்ட பல தரப்பில்ல இருந்தும் நெருக்கும் வந்தும் கூட க்ரீமிலேயரை நீக்க அர்ஜூன் சிங்கும் மறுத்துவிட்டார். கடந்த முறை நடந்தஅமைச்சரவைக் கூட்டத்தில் திமுகவும், பாமகவும் அர்ஜூன் சிங்குக்கு ஆதரவாக குரல்தீவிரமாகக் குரல் தந்தன.
இந் நிலையில் நேற்று பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் க்ரீமிலேயர் என்ற பிரிவினை எல்லாம் இல்லாமல் பிற்படுத்தப்பட்டவர்கள்அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு கூட்டத் தொடரிலேயே இது தொடர்பாக சட்ட மசோதாவைக் கொண்டுவரவும் முடிவெடுக்கப்பட்டது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் இட ஒதுக்கீட்டு தொடர்பாக அர்ஜூன்சிங்கும், திமுக, பாமக அமைச்சர்களுமே மிகவும் தீவிரம் காட்டினர்.
இக் கூட்டத்துக்கு பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ்முன்ஷி நிருபர்களிடம் கூறுகையில்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அனைத்துஅம்சங்களையும் ஆய்வு செய்த பின்னர், அதில் "க்ரீமி லேயர் போன்ற எந்தவிதகுழப்பமும் இருக்க கூடாது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை பரிசீலித்த பின்னர், மத்திய கல்வி நிறுவனங்கள்(இட ஒதுக்கீடு அனுமதி) மசோதாவில்சிறிய திருத்தம் செய்யவும மேற்கொள்ளதீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குளிர்கால கூட்டத் தொடரிலேயே மசோதா நிறைவேற்றப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications