மசூதி முன் பெரியார் சிலை வைப்பீர்களா?-பாஜக
திருச்சி:பெரியார் சிலையை சர்ச், மசூதி முன் வைக்க கருணாநிதி அனுமதி தருவாரா எனபாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
பெரியார் தனது காலம் முழுவதும் தன்னுடைய சொல்லாலும், செயலாலும்இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். கடந்த 1957ல் விநாயகர் சிலை திராவிடகழகத்தினரால் உடைக்கப்பட்டது. பின், கருணாநிதி முதல்வராக இருந்தபோது ராமர்படத்துக்கு செருப்பு மாலை போட்டு போலீஸ் பாதுகாப்புடன் பேரணி நடத்தப்பட்டது.
எங்கு பெரியார் சிலையை பார்த்தாலும் இந்துக்களுக்கு அந்த நினைவு தான் வரும்.அவருடைய சிலையை எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளட்டும். அதுபற்றிபாரதிய ஜனதாவுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், ஸ்ரீரங்கம் கோயில் முன்வைக்கக்கூடாது.
இந்துக்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் அந்த இடத்தில்சிலை வைக்க திமுக அரசு முயற்சிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர்கருணாநிதி திருச்சி வந்தபோது அதிகாரிகளிடம், எப்படியாவது ஸ்ரீரங்கத்தில்பெரியார் சிலையை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
அதனால் தான், திகவினர் சிலை வைக்க முயற்சிக்கின்றனர். சிலைகளை உடைக்கும்காலச்சாரத்தையே திகவும், திமுகவும் தான் முதலில் கொண்டு வந்தன.
விநாயகர் சிலை உடைப்பு மற்றும் ராமர் படத்துக்கு செருப்பு மாலை ஆகியசம்பவங்களின் போது இந்துக்களின் மனது எப்படி வேதனைப்பட்டதோ, அதேவேதனையை தற்போது திக வீரமணியும், திமுக கருணாநிதியும் அனுபவிக்கின்றனர்.
கடந்த 1969ல் ராமர் படத்துக்கு செருப்பு மாலைபோட்டு போலீஸ் பாதுகாப்புடன்திகவினரை ஊர்வலம் செல்ல அனுமதித்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, இன்றுஏன் சிலை உடைப்புக்கு வக்காலத்து வாங்குகிறார்?
திமுகவின் ஆட்சியில் இந்துக்களுக்கும், கோயில்களுக்கும் பாதுகாப்பு இருக்காதுஎன்பதற்கு ஸ்ரீரங்கம் சம்பவம் எடுத்துக்காட்டு. இல்லாவிட்டால், சேலம், பெரம்பலூர்உ
தமிழகத்தில் இந்து கோயில்களுக்கும், இந்து மக்களுக்கும் ஏற்படும் இழப்புகளுக்குகருணாநிதி தான் பொறுப்பேற்க வேண்டும். இந்துக்கள், கோயில்கள் தாக்கப்பட்டதைகண்டித்து தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டம்,உண்ணாவிரதம் என்று எதிர்ப்பை காண்பிக்க உள்ளன.
ஸ்ரீரங்கத்தில் எங்கு வேண்டுமானாலும் பெரியார் சிலையை வைக்கட்டும். ஆனால்,உலக பிரசித்தி பெற்ற கோயில் முன் வைக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.
பெரியார் சிலையை சர்ச், மசூதி முன் வைக்க கருணாநிதி அனுமதி அளிப்பாரா?என்றார் ராஜா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications