முல்லை-அடுத்த வாரம் அமைச்சர்கள் பேச்சு
டெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்கள்மட்டத்திலான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறுகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரளமுதல்வர்களிடையே டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும்ஏற்படவில்லை. இதையடுத்து இரு மாநில அமைச்சர்கள் மட்டத்திலானபேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும், கேரள நீர்ப்பாசனத் துறைஅமைச்சர் பிரேமச்சந்திரனும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. இந்தப்பேச்சுவார்த்தையும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில்நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் நேற்று சைபுதீன் ஜோஸை சந்தித்துப்பேசினார். சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதைநிமித்தமாகத்தான் ஜோஸை சந்தித்துப் பேசினேன். இரு மாநில அமைச்சர்கள்மட்டத்திலான பேச்சுவார்த்தையை எப்போது மேற்கொள்ளலாம் என அவர் என்னிடம்கேட்டார்.
அதற்கு நான் தமிழக சட்டசபைக் கூட்டம் முடிந்து விட்டது. எனவே எப்போதுவேண்டுமானாலும் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தேன்.இதையடுத்து கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடம் பேசி விட்டு அடுத்தவாரமே அல்லது அடுத்த 10 நாட்களிலோ பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகஜோஸ் என்னிடம் தெரிவித்தார்.
டெல்லியில் ஜோஸ் முன்னிலையில் நடந்த இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தில்கேரள முதல்வர் அச்சுதானந்தன் பேசிய பேச்சின் தமிழாக்கத்தை தமிழ் நாளிதழ்களில்கேரள அரசு வெளியிட்டுள்ளது. இதை நாங்கள் ஏற்க முடியாது. இது முற்றிலும்தவறான ஒன்று. இந்த விளம்பரம் குறித்தும் அமைச்சர் ஜோஸிடம் நான் எடுத்துக்கூறினேன் என்றார் துரைமுருகன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications