கணவரை விட்டு காதலருடன் ஓடிய பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பெங்களூரில் கல்யாணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே கணவரை உதறி விட்டுதனது காதலருடன் சென்னைக்கு ஓடி வந்த பெண், காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் நளினி. இவரது பெற்றோருக்கு பூர்வீகம் திருவண்ணாமலை.நீண்ட காலத்திற்கு முன்பே பெங்களூரில் குடியேறி விட்டனராம். நளினியும்பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். அங்குள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி.இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவருக்கும் கண்ணன் என்ற பொறியாளருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கண்ணன்சென்னையைச் சேர்ந்தவர். பெங்களூர் ராமமூர்த்தி நகரில் தங்கி வேலை பார்த்துவந்தார். இருவரும் தீவிரமாக காதலித்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் நளினியின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. காதலை ஏற்கமறுத்த அவர்கள் இனிமேல் படிக்க வேண்டாம் என்று கூறி நளினியை வீட்டோடுவைத்து விட்டனர். மேலும், நளினியை அவரது தாய்மாமன்கள் இருவர் தீவிரமாககண்காணித்தும் வந்தனர்.

நளினியை இப்படியே விட்டால் ஏதாவது செய்து கொண்டு விடுவார் என்று எண்ணியஅவரது குடும்பத்தினர், தாய்மாமன்களில் ஒருவரது மகனான ரவிக்குமாருக்கு கடந்தமாதம் 16ம் தேதி கல்யாணம் செய்து வைத்தனர். இந்தக் கல்யாணத்திற்கு நளினிசம்மதிக்கவில்லையாம். ஆனால் கட்டாயப்படுத்தி கல்யாணத்தை முடித்து விட்டனர்.

கல்யாணம் ஆனாலும் கூட ரவிக்குமார் தன்னைத் தொட நளினிஅனுமதிக்கவில்லையாம். இந்த நிலையில் நாளை இவர்களது திருமண வரவேற்புக்குஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் வீட்டை விட்டு எப்படியோ வெளியேறி விட்டநளினி, தனது காதலர் கண்ணனை சந்தித்தார். பின்னர் இருவரும் உடனடியாகசென்னைக்கு வண்டியேறி வந்து சேர்ந்தனர்.

சென்னை வந்ததும் நேராக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.அங்கு நளினி ஒரு புகார் மனுவை எழுதிக் கொடுத்தார். அதில், தனது விருப்பம்இல்லாமல் கல்யாணம் செய்து விட்டனர். இந்தக் கல்யாணத்தில் எனக்குஉடன்பாடில்லை. எனது காதலர் கண்ணனுடன்தான் சேர்ந்து வாழ்வேன்.

ரவிக்குமாரை நான் எனது கணவராக ஏற்றுக் கொள்ளவில்லை. நானும், கண்ணனும்திருமணம் செய்து கொள்ள அவரது குடும்பத்தினரும் ஒத்துக் கொண்டு விட்டனர்.எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். நாங்கள் சேர்ந்து வாழ உதவவேண்டும் என்று கூறியிருந்தார் நளினி.

இந்தப் புகார் குறித்து விசாரிக்குமாறு அயனாவரம் உதவி ஆணையருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. புகார் கொடுத்து விட்டு கிளம்புவதற்கு முன்பு தனது கழுதில்ரவிக்குமார் கட்டியிருந்த தாலிக் கயிற்றை கழற்றி ஆணையர் அலுவலகத்திலேயேகொடுத்து விட்டுச் சென்றார் நளினி.

புதுத் தாலியுடன் காதலருடன் வந்த பெண், போகும்போது தாலியை கழற்றிக்கொடுத்து விட்டுச் சென்றது ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+