ராணுவத் தாக்குதலில் 20 தமிழர்கள் பலி
கொழும்பு:இலங்கையின் வாகரை பகுதியில், ராணுவம் நடத்திய கடும் தாக்குதலில் 20 அப்பாவித் தமிழர்கள்கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசு கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், வடகிழக்கில் மோதல் உக்கிரமடைந்துள்ளது. வாகரை பகுதியில் இலங்கை ராணுவம் கடும் பீரங்கித் தாக்குதலில்ஈடுபட்டது.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் விமானப் படை மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. பால்சேனை,வம்மிவெடுவான் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்த முகாம்கள் மீது ராணுவம் நடத்தியகடும் தாக்குதலில் 20 அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 41 பேர் படுகாயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் 6 மாதக் கைக்குழந்தையும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்கள்வாகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் பட்டவர்களை மட்டக்களப்புக்கு கொண்டு செல்ல ராணுவம் அனுமதிக்காமல்தடுத்து விட்டது. இதனால் படுகாயமடைந்த 15 பேர் கதிரவேலியில் உள்ள திலீபன் மருத்துவ மையத்திற்குஅழைத்துச் செல்லப்பட்டனர்.
ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications