மஹால் டிக்கெட் மோசடி: 5 பேர் சஸ்பெண்ட்
மதுரை:மதுரை திருமலை நாயக்கர் மஹால் பார்வையாளர் கட்டணத்தில் முறைகேடு செய்ததாக 5 ஊழியர்கள் தற்காலிகபணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சி செய்து வந்த அரண்மனைதான் நாயக்கர் மஹால். தொன்மை வாய்ந்தஇந்த மஹாலின் தூண்கள் உலகப் புகழ் பெற்றவை. பாதி மஹால்தான் இப்போது மிஞ்சியுள்ளது என்றாலும்,முழுமையான மஹாலின் பெருமையை உணர முடியும்.
சுற்றுலாப் பயணிகளின் முக்கிய விசிட்டிங் இடமாக திகழும் மஹால், தமிழக அரசின் தொல்லியல் துறைகட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மஹாலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இவர்களிடம் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறியவர்களுக்கு 5 ரூபாயும்வசூலிக்கப்படும். இதுவே வெளிநாட்டுக்காரர்களாக இருந்தால் அவர்களிடம் பெரியவர்களுக்கு ரூ. 50ம்,சிறியவர்களுக்கு ரூ. 25ம் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதுதவிர மஹாலின் உட்பகுதியை புகைப்படம் எடுக்க ஒரு கேமராவுக்கு 30 ரூபாயும், வீடியோ காமரா என்றால்100 ரூாபயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
கட்டணம் செலுத்தி வாங்கப்படும் டிக்கெட்டை நுழைவாசலில் உள்ள ஊழியரிடம் காட்டினால், அவர் டிக்கெட்டைபாதியாக கிழித்து ஒரு பாதியை பார்வையாளரிடம் கொடுப்பார். இதுதான் வழக்கம். ஆனால் இங்கேதான்மோசடி நடந்துள்ளது.
தங்களிடம் தரப்படும் டிக்கெட்டுகளை கிழிக்காமல் அப்படியே வைத்துக் கொண்டு அதை டிக்கெட் கவுண்டரில்உள்ள ஊழியர்களிடம் திருப்பிக் கொடுத்து அந்த பழைய டிக்கெட்டை மீண்டும் மீண்டும் விற்றுகொள்ளையடித்து வந்துள்ளனர் டிக்கெட் கவுண்டர் ஊழியர்கள்.
இந்த மோசடி ரொம்ப காலமாகவே நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து டி.எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன் தலைமையில் போலீஸார் கடந்த 2ம் தேதி மஹாலில் திடீர்சோதனை நடத்தினர்.
அப்போது டிக்கெட் கவுண்டரில் இருந்த கேஷியர் அர்ஜூனனிடம் கணக்கில் வராத பணம் ரூ. 2000 இருந்தது.மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் பணம் சிக்கியது. பின்னர் 14 பேரை போலீஸார் விசாரணைக்காகஅழைத்துச் சென்றனர்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு மோசடி குறித்த தகவல்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அர்ஜூனன், ராதாகிருஷ்ணன், தனலட்சுமி, கனகராஜ், தீனதயாளன்ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சகாயராஜ், ராஜேந்திரன், பிரபாகரன், பழனியாண்டி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருமலை நாயக்கர் மஹால் டிக்கெட் கட்டணத்தில் நடந்த இந்த மோசடி மதுரை மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications