பொங்கல் முதல் இலவச ஸ்டவ்-கியாஸ் இணைப்பு
சென்னை:தமிழர் திருநாளான பொங்கல் முதல் ஏழைகளுக்கு இலவச கியாஸ் ஸ்டவ், சிலிண்டெர் இணைப்பு வழங்கும்திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
கியாஸ் இணைப்பு இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ்நடப்பு நிதியாண்டில் (2006-2007) 3,00,000 லட்சம் குடும்பங்களுக்கும், அடுத்த நிதியாண்டிலிருந்து நான்குஆண்டுகளில் கியாஸ் இணைப்பு இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கியாஸ் இணைப்பு இல்லாத குடும்பங்கள், ரேசன் கார்டுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.
இத் திட்டத்தை பொங்கல் தினத்தன்று சென்னையில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இதையடுத்துஅனைத்து மாவட்டத் தலைநகரங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைப்பார்கள்.
தொடங்க விழாவன்று 30,000 பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்படும். 2007ம் ஆண்டு ஜனவரி மாதஇறுதிக்குள் 1.5 லட்சம் கும்பங்களுக்கும், மார்ச் மாதத்தில் 1.5 லட்சம் குடும்பங்களுக்கும் இலவச கியாஸ் அடுப்பு,காஸ் இணைப்பு வழங்கப்படும்.
முதல் கட்டமாக, தற்போதுள்ள காஸ் சிலிண்டெர் வினியோகஸ்தர்கள் மூலமாக நகர்ப் பகுதிகளிலிருந்து 15 கி.மீ.சுற்றளவு பகுதியில் உள்ள கிராமங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவற்கு தேர்ந்தெடுக்கப்படும்.
அடுத்த நிதியாண்டு (2007-2008) முதல் தற்போது கேஸ் ஏஜென்சிகள் இல்லாத பகுதிகளில் தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழக்மே ஏஜென்சியாக செயல்பட்டு தொலைதூரக் கிராமங்களிலும் இத் திட்டம்செயல்படுத்தப்படும்.
முதல் கட்டமாக 200 ரேசன் அட்டைகள் உள்ள கொண்ட நியாய விலைக் கடைகளில் இருந்து பயனாளிகள்தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இத்தகைய நியாய விலைக் கடைகள் இல்லாத மாவட்டங்களில் 500 குடும்ப அட்டைவரை உள்ள நியாவிலைக் கடைகளில் இருந்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இத் திட்டதின் கீழ் பயனாளிகளை கிராமப் புறங்களில் ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், பள்ளித்தலைமையாசிரியார் அல்லது ஆசிரியர், மக்கள் நலப் பணியாளர் மற்றும் சமூக நலத் தொண்டர் அடங்கிய குழுதேர்வு செய்யும்.
நகர்ப் பகுதிகளில் கவுன்சிலர் தலைமையில் வரித் தண்டலர், வருவாய்த் துறை அலுவலர், பள்ளித்தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர் மற்றும் சமூக நலத் தொண்டர் கொண்ட குழு பயனாளிகளைத் தேர்வுசெய்யும்.
இவ்வாறு இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த உயர் மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications