பாஜக அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
டெல்லி:நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும்ஒத்தி வைக்கப்பட்டன.
சனிக்கிழமை டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்,
வளர்ச்சித் திட்டங்களின் பலன்கள் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லீம்களுக்கு சென்றடையும் வகையில்அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பேசியதாகக் கூறி பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதையடுத்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட விளக்கத்தில், தாழ்த்தப்பட்டடோர், பழங்குடியினர்,சிறுபான்மையினர், பெண்கள் உள்பட சமூகத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பலனடைய வேண்டும்என்ற அர்த்தத்தில் தான் பிரதமர் பேசினார்.
ஆனால், பிரதமரின் பேச்சை திரித்துக் கூறி பாஜக சர்ச்சை கிளப்புகிறது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்தது. அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டுஇது குறித்து விவாதிக்க வேண்டும் என பாஜக கோரியது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாஜக எம்பி மல்ஹோத்கா கூறினார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக, காங்கிரஸ் எம்பிக்கள் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் மக்களவையில் பெரும் அமளி நிலவியது. இதையடுத்து அவையை சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி பகல் வரை ஒத்தி வைத்தார்.
மீண்டும் அவை கூடியதும் மீண்டும் பாஜக அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் இதை நிலை நீடித்ததால் அந்த அவையும் ஒத்திவைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications