இலங்கை ராணுவ தாக்குதலில் 23 தமிழர்கள் பலி
கொழும்பு:தமிழர் பகுதியில் இலங்கை ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் 23 அப்பாவி தமிழர்கள் உயிரிழந்தனர்.50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் வெறித் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரையில் கடந்த 2 நாட்களாக நடந்த மோதலில் 100க்கும்மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்நிலையில் இலங்கை ராணுவம் தொடர்ந்து தமிழர்களின் குடியிருப்புகள் மீதுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 50க்கும்மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த பொதுமக்களை செஞ்சிலுவை சங்கத்தினர் கடல் வழியாக படகுகளில் கொண்டு மட்டக்களப்புமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
வம்மி வெட்டுவான், கண்டலடி பகுதியில் இரணுவம் 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசி தாக்கதல் நடத்தின.இதில் கண்டலடி பகுதியில் ஒரு பள்ளி இடிந்து தடை மட்டமானது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துதடைமட்டமாயின.
வீடுகளை இழந்த பொதுமக்கள் வாகரை மருத்துவமனையை ஒட்டியுள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீடு இழந்தவர்கள் மழையில் நனைந்தபடி தவிக்கின்றனர்.
ஈழத் தமிழர்களுக்கு உணவு, உதவி சேகரிப்பு:
இந் நிலையில் தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் இலங்கைதமிழர்களுக்கு உணவு, உடை, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டும் பணிநடக்கவுள்ளது.
டிசம்பர் 15ம் தேதி முதல் இரு வாரங்களுக்கு தமிழகத்தில் இந்த உதவிகள் திரட்டப்படும் என கமிட்டியின்தலைவரான பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இந்தப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பசியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications