திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி :திருச்சி காஜாமலையில் உள்ள பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்ததகவலால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
காஜாமலையில் உள்ள சைல்டு ஜீசஸ் நடுநிலைப் பள்ளிக்கு இன்று காலை ஒருதொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பள்ளியில் சக்தி வாய்ந்தவெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனால் பள்ளியில் பதட்டம் ஏற்பட்டது. மாணவர்களை வகுப்பறைகளைவிட்டுவெளியேற்றி மைதானத்தில் ஆசிரியர்கள் நிறுத்தினர்.
மோப்ப நாய்களுடன் போலீஸாரும், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர்களும்விரைந்து வந்து பள்ளி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வகுப்புகள் வழக்கம் போலநடந்தன.












Click it and Unblock the Notifications