2ம் கட்டமாக 21,682 பேருக்கு இலவச நிலம்
சென்னை:நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக வரும்டிசம்பர் 17ம் தேதி 21,682 பேருக்கு நிலம் வழங்கப்படவுள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றான இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 23,440ஏழை விவசாயி குடும்பங்களுக்கு பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி தலா 2 ஏக்கர் நிலம்வழங்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இலவச நிலம் வழங்கும் திட்டத்தை டிசம்பர் 17ம் தேதி விழுப்புரத்தில்முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமானஆக்கிரமிப்பில் இல்லாத 5,395 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலம், பண்படுத்தப்பட்டு 5,399 நிலமற்ற விவசாயகுடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மேலும் அதே தினத்தில் அரசுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பில் உள்ள 10,547 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலத்தைபண்படுத்தி 15,614 நிலமற்ற சிறு குறு விவசாய குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கவும் தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
இதைத் தவிர சிறு குறு விவசாயிகளுக்குச் சொந்தமான 9,953 ஏக்கர் பட்டா தரிசு நிலங்களை அரசின் செலவில்மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றி 5,736 விவசாய குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் மொத்தம் 21,682 பேருக்கு இலவச நிலம் தரப்படும் என அரசின் செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications