எச்ஐவி தம்பதிக்கு நோய் பாதிப்பில்லா குழந்தை
விருதுநகர்:விருதுநகரைச் சேர்ந்த எச்ஐவி பாதிக்கப்பட்ட தம்பதிக்கு, வைரஸ் பாதிப்பில்லாதஅழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு சிலஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் காயமடைந்தது. இதற்காக ரத்தம்ஏற்றப்பட்டது. அதில் அவருக்கு தவறுதலாக எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரின் ரத்தம்சிவாவுக்கு ஏற்றப்பட்டு விட்டது.
இதனால் சிவாவுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மனம் உடையாத சிவா,தன்னைப் போல எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கமுடிவு செய்தார்.
இந்த நிலையில் விருதுநகர் சூலக்கரையைச் சேர்ந்த, எச்ஐவியால் பாதிக்கப்பட்டசுசீலாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இந்த நிலையில் சசீலா கர்ப்பமடைந்தார். இதையடுத்து குழந்தைக்கும் எச்ஐவி பாதிப்புவந்து விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுசீலாவுக்குமருந்துகள் தரப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் விருதுநகர் அரசு மருத்துவமனையில், சுசீலாவுக்குபெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் மீண்டும் நெவராபின் மருந்துகொடுக்கப்பட்டது. இதனால் குழந்தைக்கு எச்ஐவி வைரஸ் தாக்குதல் ஏற்படவில்லை.
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட கணவன், மனைவிக்கு அந்த பாதிப்பு இல்லாத குழந்தைபிறந்திருப்பதால் இரு வீட்டாரும் சந்தோஷமடைந்துள்ளனர். குழந்தை நல்லநலத்துடன் இருப்பதால் கூடுதல் சந்தோஷமும் அந்தக் குடும்பத்தினரைமகிழ்வித்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications