சேலம் அருகே திமுக அலுவலகத்திற்கு தீ வைப்பு
சேலம்:சேலம் அருகே உள்ள திருமலைகிரியில் திமுக அலுவலகத்திற்கு சில அடையாளம் தெரியாத கும்பல் தீவைத்தனர்.
சேலம் திருமலைகிரியில் சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சி தேர்தலின் போது அதிமுகவினருக்கும்,திமுகவினருக்கும் இடையே மோதல் எற்பட்டது. ஊராட்சி தேர்தலில் அதிமுகவைத் சேர்ந்த வைரமணி என்பவர்பஞ்சாத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு அதிமுகவை சேர்ந்த பூவரசன் என்வர் திருமலைகிரி பஸ் நிறுத்தம அருகே சென்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்து அவரிடம் திமுகவினர் சிலர் தகராறு செய்தனர். இதனால்அப்பகுதியில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் திமுகவை சேர்ந்தகர்ணன், மாணிக்கம், அதிமுகவினை சேர்ந்த ராஜேந்திரன், சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள்சேலம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவு திருமலைகிரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள திமுக தேர்தல் அலுவலகத்துக்கு சிலஅடையாளம் தெரிய கும்பல் தீ வைத்து விட்டு, அந்த வழியாக வந்த அரசு டவன் பஸ் மீது கல்வீசி தாக்கி தப்பிஓடினர்.
இதுகுறித்து தகவல் அறித்த திமுகவினர் செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலைத்துக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறித்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திமுகதேர்தல் அலுவலகத்திற்கு தீ வைத்தது தொடர்பாக அதிமுகவை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பெயர் விவரங்களை போலீசார் கூற மறுத்துவிட்டனர்.
திமுக தேர்தல் அலுவலகத்திற்கு தீ வைப்பு, பஸ் கண்ணாடி உடைப்பு காரணமாக அங்கு பெரும் பதட்டம்ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications