மேட்டூர் அணையில் உளவுத்துறை திடீர் ஆய்வு
மேட்டூர்:மேட்டூர் அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய உளவுத்துறை பிரிவான ஐபி (இன்டலிஜென்ஸ் பீரோ) ஆய்வுநடத்தியுள்ளது.
நாடு முழுவதும் முக்கியமான இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.அந்த வகையில் விமான நிலையங்கள், மின் நிலையங்கள், அணைக் கட்டுகள், முக்கிய ரயில் நிலையங்களில்பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முக்கிய அணைகள், முக்கிய கோயில்களில் நிலவும் பாதுகாப்பு குறித்து மத்திய உளவுத் துறைஆய்து வருகிறது.
இந்த வகையில் தமிழகத்தின் பெரிய அணையான மேட்டூர் அணையின் பாதுகாப்பு குறித்து உளவுப் பிரிவினர்நேரடி ஆய்வு மேற்கொண்டனர். எந்தெந்த இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடுவது, சுழலும் விளக்குஅமைக்கும் இடங்கள், எச்சரிக்கை அலாரம் வைக்கும் இடங்கள், பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கு இடங்கள்குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் அணையின் பாதுகாப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது 24பேர் கொண்ட ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரினர்.












Click it and Unblock the Notifications