ஜப்பான் கிளம்பினார் மன்மோகன் சிங்
டெல்லி:நான்கு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை ஜப்பான் புறப்பட்டச்சென்றார். பிரமதருடன் அவரது மனைவி குர்சரன் கெளர் மற்றும் உயர் மட்டக்குழுவும்டோக்கியோ சென்றுள்ளது. ஜப்பான் செல்லும் பிரதமருக்கு அமைச்சர்கள், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.இன்று இரவு பிரதமர் டோக்கியோ சென்றடைகிறார்.
நாளை பிரதமருக்கு ஜப்பான் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் பாரம்பரிய முறைப்படிவரவேற்பு அளிக்கின்றனர். அதன் பின்னர் நாளை பிற்பகல் ஜப்பான் பிரதமர்ஷின்ஷோ அபேயை மன்மோகன் சிங் சந்திக்கிறார். அதன் பிறகு இரு தலைவர்களும்கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அன்று இரவு பிரதமருக்கு ஜப்பான்பிரதமர் விருந்தளித்து கெளரவிக்கிறார்.
நாளை ஜப்பான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகிறார். நாளை மாலை இந்திய விழாவையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.இந்த விழாவின்போது 2007ம் ஆண்டுக்கான இந்திய-ஜப்பான் நட்புறவுசின்னத்தையும் இரு நாட்டு பிரதமர்களும் திறந்து வைக்கிறார்கள்.
இதன் பின்னர் 15ம் தேதி இரு நாட்டு வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெறும்கூட்டத்தில் பிரதமர் உரை நிகழ்த்துகிறார். தனது ஜப்பான் பயணத்தின்போது முன்னாள்பிரதமர் யோஷிரோ மோரி, மூத்த அமைச்சர்கள், ஜப்பான்-இந்திய நாடாளுமன்றநட்புறவுக் குழுத் தலைவர் உள்ளிட்டோரை பிரதமர் சந்திக்கிறார்.
தனது ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை மாலை மன்மோகன் சிங்டெல்லி திரும்புகிறார். டோக்கியோ கிளம்பும் முன்னர் மன்மோகன் சிங் பேசுகையில்,இந்திய வெளியுறவுக் கொள்கையில், கிழக்கத்திய நாடுகளுக்கு நாம் அளிக்கும்முக்கியத்துவத்தை இந்தப் பயணம் உணர்த்துகிறது. கிழக்கு ஆசிய பிராந்தியத்தில்வலுவான நாடாக திகழும் ஜப்பானுடன் நெருங்கிய உறவு ஏற்பட இந்தப் பயணம்உதவும்.
இந்தியாவும் ஜப்பானும் அரசியல், பொருளாதார ரீதியில் மிகவும் நெருங்கியதொடர்புடைய நாடுகள். பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளின்முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது.
புதிய கோணத்தில் இரு நாட்டு உறவுகளும் செல்ல ஆரம்பித்துள்ளன. இந்தஉறவுகளை வலுப்படுத்த இந்த பயணத்தை பயன்படுத்திக் கொள்வேன்.சுற்றுலா, எரிசக்தி, போக்குவரத்து, அறிவியல் தொழில்நுட்பம், கலாச்சாரம் ஆகியதுறைகளில் இரு நாடுகளும் மேலும் இணைந்து செயல்பட இந்த பயணத்தின்போதுஆக்கப்பூர்வமான பேச்சுக்கள் இடம்பெறும் என்றார் மன்மோகன் சிங்.
இந்தப் பயணத்தின் போது இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம், ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம், ஜி4 நாடுகளின் ஒருங்கிணைந்தசெயல்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் பேசப்படும் எனதெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications