ஆண்டன் பாலசிங்கம் மறைந்தார்
லண்டன்:
![]() |
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இன்று லண்டனில் காலமானார். அவருக்குவயது 68.
30 ஆண்டுகளுக்கும் மேலாக புலிகளின் ஆலோசகராக, பிரபாகரனின் வலதுகரமாக விளங்கியவர் பாலசிங்கம்.
இலங்கை இனப் பிரச்சனையில் இதுவரை நடந்த முக்கியமான பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் புலிகளின்சார்பில் பங்கேற்றவர் ஆண்டன். 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த முதல் பேச்சுவார்த்தையில் தொடங்கி இந்தஆண்டு பிப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் ஜெனீவாவில் நடந்த அமைதிப்பேச்சவார்த்தை வரை அனைத்திலும் பாலசிங்கம் கலந்து கொண்டுள்ளார்.
பாலசிங்கம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு சர்க்கரை வியாதியும் இதயநோயும் இருந்தது.
இருப்பினும் ஓய்வில்லாமல் தனது பணிகளில் ஈடுபட்டிருந்த அவரை புற்று நோய் தாக்கியது. அவருக்குஉணவுக் குழாயில் புற்று நோய் ஏற்பட்டிருப்பது கடந்த மாதம் தான்கண்டறியப்பட்டது. இதையடுத்து லண்டனில் உள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், நோய் முற்றி அவரது கல்லீரல், நுரையீரல், எலும்பு மஜ்ஜை ஆகிய உறுப்புகளும் பாதிக்கப்பட்டன.இதனால் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உடல் நலம் தேறவில்லை.
![]() |
இதையடுத்து தெற்கு லண்டனில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிகிச்சை தரப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனிளிக்காமல் இன்று (வியாழக்கிழமை) அவர் மரணமடைந்தார்.
பாலசிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் கொழும்பில் செய்தியாளராகபணியாற்றியுள்ளார். பின்னர் கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில்மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.
பின்னர் சென்னையில் வைத்து பிரபாகரனுக்கு பழக்கமானார். அதிலிருந்து புலிகள் இயக்கத்தின் மூளையாகசெயல்பட்டு வந்தார் பாலசிங்கம்.
முதலில் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணை மணந்தார் பாலசிங்கம். அவர்உடல் நலக்குறைவால் இறந்த பின்னர் 1978ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தஅடிலே ஆனை மணம் புரிந்தார். லண்டனில் இவர்களது திருமணம் நடந்தது.
பாலசிங்கத்தை மணந்த பின்னர் ஆன், விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராகஇணைந்தார். புலிகள் இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த பாலசிங்கத்திற்குபேருதவியாக இருந்தார் ஆன். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஆனும் கலந்துகொண்டார்.
புற்று நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து சமீபத்தில் ஆண்டன் பாலசிங்கம்கருத்து தெரிவிக்கையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனது மக்களின்கடலளவு துயரத்துடன் ஒப்பிடுகையில் இந்த புற்றுநோய் மிகவும் சாதாரணமானது.எனது மக்களுக்காக பாடுபட முடியாமல் நான் முடங்கிப் போயுள்ளது வருத்தம்தருகிறது என்று கூறியிருந்தார்.
பாலசிங்கத்தின் மறைவு தமிழ் ஈழப் பகுதிகளையும் தமிழர்களையும் பெரும்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலசிங்கத்தின் உடல் லண்டனிலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.














Click it and Unblock the Notifications