அணை- முத்திரி கொட்டை கேரளா முஸ்தீபு

Subscribe to Oneindia Tamil

குமுளி:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில்,புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வில் இறங்கியுள்ளது கேரள அரசு.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை ஏற்காத கேரள அரசு அதைத் தடுக்கும் வகையில்அம்மாநில சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் தமிழக, கேரள முதல்வர்களிடையேபேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.அதேசமயம், இரு மாநில அமைச்சர்கள் சந்தித்துப் பேச முடிவெடுக்கப்பட்டது.

அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை வருகிற 18ம் தேதி டெல்லியில்நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கேரள அரசு சில முந்திரிக் கொட்டைநடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே தற்போதைய அணைக்குப் பதில் புதிய அணை கட்ட வேண்டும்என கேரளா கூறி வருகிறது. இந்த நிலையில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை கேரள அரசு மேற்கொண்டுள்ளது.

தற்போதுள்ள அணைக்குக் கீழே 1,300 அடிக்குக் கீழ் புதிய அணையைக் கட்டுவதுதொடர்பான ஆய்வை அம்மாநில மின்வாரிய தலைமைப் பொறியாளரும், அணைகள்பாதுகாப்புக் கமிட்டி உறுப்பினருமான ராமகிருஷ்ணன் மற்றும் நீர்ப்பாசனத் துறைஅதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது.

ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டாமல் தனக்கு சாதகமானநடவடிக்கைகளில் மட்டுமே தொடர்ந்து கேரள அரசு ஈடுபட்டு வருவதுஇப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+