150வது ஆண்டு விழா காணும் சென்னை போலீஸ்
சென்னை:சென்னை மாநகர காவல்துறை தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இதையொட்டி ஜனவரி 4ம் தேதி 150வது ஆண்டு விழா தொடங்கி 3 நாட்களுக்குநடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் செய்தியாளர்களிடம்கூறுகையில், சென்னை மாநகர காவல்துறை தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள்ஆகின்றன. இந்த விழாவை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
இதுதொடர்பான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகர காவல்துறையின் சிறப்புகளை விளக்கும் வகையில் கண்காட்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
150வது ஆண்டு தொடக்க விழா ஜனவரி 4ம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை4.30 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர்கருணாநிதி பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார்.
5 மற்றும் 6ம் தேதிகளிலும் விழாக்கள் நடைபெறும். அதுகுறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை.
சென்னை காவல்துறையின் 150 ஆண்டு கால வரலாற்றை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழா நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்றார் லத்திகா சரண்.












Click it and Unblock the Notifications