9 பேரை இழந்த சோகத்தில் ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்:சென்னை அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியான சம்பவம், அவர்களது சொந்தஊரான ராமேஸ்வரம் அருகே உள்ள வேர்க்கோடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேர்க்கோடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர் அருளானந்தத்தின் மகன் ரமேஷுக்கு கொரியாவில்வேலை கிடைத்தது. இதையடுத்து ரமேஷ் சென்னையிலிருந்து கொரியா செல்ல முடிவு செய்தார்.
அவரை வழியனுப்புவதற்காக ரமேஷின் குடும்பத்தினர் கார் மூலம் சென்னை கிளம்பி வந்தனர். ரமேஷைமும்பைக்கு அனுப்பி வைத்து விட்டு அனைவரும் ஊருக்குத் திரும்பினர்.
சென்னை அருகே கோவளம் அருகே கார் வந்தபோது, முன்னே சென்று கொண்டிருந்த பேருந்தை முந்திச் செல்லகார் டிரைவர் முயன்றார். அப்போது எதிர் திசையில் டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்தது. இதை எதிர்பாராத கார்டிரைவரும், காரை எதிர்பாராத லாரி டிரைவரும் தடுமாறி வாகனங்களை வேறு பக்கம் திருப்ப முயன்றனர்.
இந்த குழப்பத்தில் லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த அருளானந்தத்தின் மகன்ராஜசேகர், மருமகன் அந்தோணி அடிமை, அவரது இரு மகன்களான டெரிக், காட்சன், தங்கை இம்மாகுலேட்,இருதயமேரி, வின்சென்ட், விமலம்மா, மெமோயன் உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அருளானந்தம் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இறந்தது வேர்க்கோடு கிராமத்தில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. வேர்க்கோடு தவிர அக்காமடம், தங்கச்சிமடம் ஆகிய சுற்றுப்புற கிராமங்களும் சோகத்தில்ஆழ்ந்துள்ளன.
அருளானந்தத்தின் வீட்டுக்கு உறவினர்களும், கிராமத்தினரும் திரண்டு வந்துள்ளனர். இந்த பரிதாப சம்பவத்தைத்தொடர்ந்து இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கக் கடலுக்குப் போகவில்லை.
அருளானந்தத்தின் உறவினர்களும், குடும்பத்தினரும் பேருந்துகள் மூலம் சென்னைக்கு விரைந்துள்ளனர். இன்றுஉடல்கள் ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.












Click it and Unblock the Notifications