மண்டபம்: விஜயகாந்த்துக்கு ரூ. 8.55 கோடி இழப்பீடு
சென்னை:சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின்ஒரு பகுதியை இடிப்பதற்காக அவருக்கு ரூ. 8.55 கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை நகரில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, பாடி,மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.
அதேபோல மதுரவாயல் -கோயம்பேடு சந்திப்பிலும் ஒரு அடுக்கு மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்தப் பாலம்கட்டும் பணிக்காக 165 தனியாருக்குச் சொந்தமான நிலங்கள், வீடுகளை தேசிய நெடுஞ்சாலைத் துறைகையகப்படுத்தியுள்ளது.
அதில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியும் அடங்கும்.இதற்கு விஜயகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தன்னை அழிப்பதற்காகவே திமுக திட்டமிட்டு இந்தமேம்பாலத்தைக் காரணம் காட்டி கல்யாண மண்டபத்தை குறி வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மண்டபத்தை இடிக்காமல் பாலம் கட்டுவதற்கான மாற்றுத் திட்டத்தையும் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்டி.ஆர்.பாலுவுக்கு அவர் அனுப்பி வைத்தார். ஆனால் அது சரியில்லை என்று பாலு கூறி விட்டார். மண்டபத்தின்ஒரு பகுதியை இடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. மக்கள் நலனுக்காக விஜயகாந்த் ஒத்துழைக்க வேண்டும்என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரியவர்களுக்காக இழப்பீட்டுத் தொகையை தேசியநெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும், தமிழக அரசின் வருவாய்த் துறை அதிகாரிகளும் நிர்ணயித்து விட்டனர்.இதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டுவாடாவும் தொடங்கவுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 165 பேருக்கும் வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் விஜயகாந்த்நிலத்திற்கான இழப்பீடாக ரூ. 8.55 கோடி வழங்கப்படும் என வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகநில உரிமையாளரான விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவுக்கு நோட்டீஸ் போயுள்ளது.
காஞ்சிபுரம் வருவாட் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து இதற்கான டி.டி.யை பெற்றுக் கொள்ளுமாறு அந்தநோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ. 23 கோடி அளவுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அனைவருக்கும் திங்கள்கிழமை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது. ஒரிஜினல் நிலப் பத்திரத்தைக் காட்டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
இழப்பீடு வழங்கி முடிக்கப்பட்டதும் கோயம்பேடு சந்திப்பைச் சுற்றிலும் உள்ள கட்டடங்களை இடித்து விட்டுபாலம் கட்டும் பணி தொடங்கும்.
வருவாய்த் துறை கொடுக்கும் இழப்பீட்டுத் தொகையை விஜயகாந்த் பெற்றுக் கொள்வாரா அல்லது வழக்குப்போடுவாரா என்பது குறித்து தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications