கடலில் மூழ்கிய புதுவை மீனவர்கள் - ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி:புதுச்சேரியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடலில் மூழ்கினர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற ஐவரும்படுகாயமடைந்தனர்.

புதுவை அருகே உள்ள வீராம்பட்டினம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர்.

கடலில் ஏற்பட்ட திடீர் கொந்தளிப்பில் சிக்கி அவர்களது ஒரு படகு கடலில் மூழ்கியது. இதில் அதில் இருந்தஹரிகிருஷ்ணன் (28) என்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற ஐந்து பேரும் படுகாயமடைந்தனர்.

அவர்களை ஹரிகிருஷ்ணனின் சகோதரர் மகேந்திரன் மற்றும் பிறர் சேர்ந்து மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.இந்த மு.யற்சியில் மகேந்திரனுக்கும் காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவர்களில் மதிவாணன், பிரபு ஆகியோர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வினோத், வடிவேல் மற்றும் மகேந்திரன் ஆகியோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ்செய்யப்பட்டனர்.

காயமடைந்த மீனவர்களை பாமக எம்.எல்.ஏ. அனந்தராமன் பார்த்து நலம் விசாரித்தார்.

குமரியில் தொடரும் சூறாவளி:

இதற்கிடையே கன்னியாகுமரி கடல் பகுதியில் தொடர்ந்து 2வது நாளாக பலத்த சூறாவளிக் காற்றும், கடல்கொந்தளிப்பும் காணப்பட்டது.

நேற்று முதல் சூறாவளிக் காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்குப் போக முடியவில்லை. கடல்கொந்தளிப்பும் அதிகம் காணப்படுகிறது. இதனால், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இன்றும் கடல் கொந்தளிப்பும், சூறாவளியும் தொடர்ந்து நிலவுவதால், மீனவர்கள் இன்றும் கடலுக்குப் போகமுடியவில்லை. அதேபோல படகுப் போக்குவரத்தும் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள்பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+