இன்று 2வது கட்ட இலவச நில விநியோகம்
விழுப்புரம்:தமிழக அரசின் இரண்டாவது கட்ட இலவச நில விநியோகத்தை முதல்வர் கருணாநிதி விழுப்புரத்தில் தொடங்கிவைக்கிறார்.
தமிழக அரசின் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 17ம் தேதிபெரியார் தினத்தன்று தொடங்கியது. முதல் கட்டமாக 1036 பேருக்கு நிலம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது கட்ட நிலம் வழங்கும் நிகழ்ச்சி இன்று விழுப்புரத்தில் நடைபெறுகிறது. அங்குள்ளதூய இருதய பள்ளி அருகே வீட்டு வசதி வாரிய மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும்நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2061 விவசாயிகளுக்கு 890.62ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை வழங்குகிறார்.
முன்னதாக இலவசமாக வழங்கப்படவுள்ள நிலங்களை கருணாநிதி பார்வையிடுகிறார். பிற மாவட்டங்களில்மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டு நிலப்பட்டாக்களை வழங்குகின்றனர்.












Click it and Unblock the Notifications