திருட்டைத் தடுக்க 12 காவல் படைகள்!
சென்னை:சென்னை மாநகரில் திருட்டி, கொள்ளைச் சம்பவங்களை தடுக்க 12 தனி காவல் படைகள்அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
திருட்டு, கொள்ளை போன்ற வழக்குகளில் மீட்கப்பட்ட நகை, பொருட்களை அவர்களுக்கு உரியவர்களிடம்ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு உரியவர்களிடம் பொருட்களை வழங்கிய பின்னர் லத்திகா சரண் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
சென்னையில் மொத்தம் 12 காவல்துறை மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் ஒரு துணைஆணையர் பொறுப்பில் உள்ளன.
இந்த காவல் மாவட்டங்களில் திருட்டு, கொள்ளையைத் தடுக்கவும், இந்த வழக்குகளை துப்பு துலக்கவும் தலாஒரு தனிப்படை வீதம் மொத்தம் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச் செயல்களை தடுப்பதிலும், அதுதொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களை பிடிப்பதிலும்இந்தத் தனிப்படைகள் தீவீரமாக செயல்படும்.
சென்னை புறநகரில் பெரும் சவாலாக உள்ள பீரோ புல்லிங் கொள்ளையர்கள் இதுவரை பிடிபடவில்லை. பீரோபுல்லிங் தவிர கிரில் கொள்ளையர்களும் உள்ளனர். அவர்களையும் தீவிரமாக தேடி வருகிறோம்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அணுகி நகைகளுக்கு பாலீஸ் போடுவதாக கூறி பல வீடுகளில்நகைகளைத் திருடிய கும்பலைக் கைது செய்து அவர்களிடமிருந்து 31 சவரன் நகை மற்றும் ரூ. 47 ஆயிரம்ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளோம்.
இதுதவிர வேன்களோடு வீடுகளுக்குச் சென்று திருடும் 6 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் உள்பட 12 பேரையும்கைது செய்துள்ளோம். இவர்கள் ரூ. 1 கோடி அளவுக்கு திருடியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களைதீவிரமாக விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செல்போன் திருட்டுக்களை ஈ மெயில் மூலமாகவும், உள்ளூர் காவல் நிலையங்களிலும் நேரடியாக கொடுக்கலாம்.இந்தப் புகார்களை அந்தந்த செல்போன் ஆபரேட்டர்கள் உதவியுடன் கண்டுபிடிக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளோம்.
சென்னை நகர மக்கள் ரவுடித் தொல்லையிலிருந்து விடுபட்டு வாழ காவல்துறை உறுதியாக உள்ளது. ரவுடிகள்நடமாட்டம், மிரட்டல், திருட்டு உள்ளிட்டவை குறித்து புகார் கொடுக்க பரீட்சார்த்த தொலைபேசி வசதியைசெய்துள்ளோம். 044-23452324, 23452323 என்ற தொலைபேசி எண்களில் இந்தப் புகார்களைக் கொடுக்கலாம்.
இந்த தொலைபேசி சேவைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தினசரி ஐந்து அல்லது ஆறு பேர் புகார்கொடுக்கிறார்கள் என்றார் லத்திகா சரண்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications