சொத்துக் குவிப்பு வழக்கு: லாலு, ராப்ரி விடுதலை
பாட்னா:சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீகார்மாநில முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி ஆகியோரை பாட்னா நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
கடந்த 1990ம் ஆண்டு முதல் 1997 வரை லாலு பிரசாத் பீகார் முதல்வராக இருந்தார். அப்போது வருமானத்திற்குமீறிய வகையில் 46 லட்சத்து 26 ஆயிரத்து 826 ரூபாய் மற்றும் 87 பைசா அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறிலாலு மற்றும் மனைவி ராப்ரி தேவி ஆகியோர் மீது பாட்ானா சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 1998ம் ஆண்டு வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத் சில மாதம் சிறையில் இருந்தார். இதையடுத்து ராப்ரி தேவிமுதல்வரானார். பின்னர் லாலு ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாகவிசாரணை நடந்து வந்தது.
132 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2000மாவது ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.டிசம்பர் 5ம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்தது.
இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி லாலு, ராப்ரி ஆகியோர் ஆயிரக்கணக்கானதொண்டர்கள் புடை சூழ பாட்னா சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
நீதிபதி முனி லால் பாஸ்வான் கூறுகையில், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோர் மீதானபுகார்களிலிருந்து இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
தீர்ப்பைத் தொடர்ந்து லாலுவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கோஷம் இட்டனர். பின்னர் வெளியே வந்த லாலுபிரசாத் தீர்ப்பு குறித்துக் கூறுகையில், பாலும், தண்ணீரும் தெளிவாகி விட்டது. இறைவனுக்கு நன்றி. கடைசியில்எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்றார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுமா என்று சிபிஐ வழக்கறிஞர் அன்சாரியிடம் கேட்டபோது,தீர்ப்பின் நகல் கைக்கு வந்த பிறகுதான் எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கப்படும் என்றார்.
இந்த வழக்கிலிருந்து லாலு விடுவிக்கப்பட்டு விட்டாலும் கூட கால்நடைத் தீவண ஊழல் வழக்கு உள்ளிட்டமேலும் 6 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications