இலங்கை கடற்படையினருக்கு புனேவில் பயிற்சி!!
சென்னை:இலங்கை கடற்படையைச் சேர்ந்த 12 அதிகாரிகளுக்கு புனே நகரில் பயிற்சிஅளிக்கப்படவுள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து சென்னை வந்து அங்கிருந்துஅவர்கள் புனே சென்றுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள கடற்படை பயிற்சி நிலையத்தில் இலங்கைகடற்படையின் 12 அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதற்காக அந்த 12 அதிகாரிகளும் நேற்று ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம்கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். பின்னர் இரவு அவர்கள் இன்னொரு விமானம்மூலம் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
பின்னர் மும்பையிலிருந்து புனே சென்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். சிங்களப்படை அதிகாரிகள் சென்னை வந்த தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.அவர்களுக்கு பலத்த பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.
இலங்கைப் படையினருக்கு எந்தவிதமான பயிற்சியும், ஆயுத உதவியும் செய்யக்கூடாது என தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்திவருகின்றனர். ஆனால் அடுத்தடுத்து இலங்கைப் படையினருக்கு பயிற்சிகொடுக்கப்பட்டு வருகிறது.
முதலில் கோவையில் விமானப்படையினருக்கு பயிற்சி தரப்பட்டது. கடும் எதிர்ப்புஎழுந்ததைத் தொடர்ந்து அவர்கள் பெங்களூர் சென்றனர். பின்னர் சமீபத்தில்சண்டிகரில் விமானப் படையினருக்கு பயிற்சி தரப்பட்டது. தற்போது புனேவில்கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சமீபத்தில் இலங்கை கடற்படையினருக்கு வெடிபொருட்களும் இந்தியாவிலிருந்துஅனுப்பப்பட்டது. அதுவும் புனேவிலிருந்துதான் சென்றது. தற்போது அதே புனேநகருக்கு கடற்படையினர் பயிற்சிக்காக சென்றுள்ளது தமிழக அரசியலில் பெரும்புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணா குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை
இந் நிலையில் இலங்கையில் கருணா குழுவினரை சேர்ந்த 3 பேரை மர்ம கும்பல் ஒன்று சுட்டுக்கொலை செய்தது.
இலங்கையில் இரணுவத்திற்க்கும், விடுதலைபுலிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மட்களப்பு மாவட்டம் செங்கலடியில்தெருவில் சில கருணா குழுவினர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடுநடத்தினர். இதில் கருணா குழுவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவர் காயம் அடைந்தார்.
இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று கருணா குழுவினர் புகார் கூறியுள்ளனர். ஆயுதம் இன்றி நின்று இருந்த எங்கள் இயக்கத்தினரைகொன்று இருப்து கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே வாகரை பகுதியில் ராணுவம் குண்டு வீச்சில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தி.க. மனித சங்கிலி போராட்டம்
இதற்கிடையே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு துரிதமாக செயல்பட வலியுறுத்தி வருகிற 22ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் மனிதசங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு தமிழர்களைக் காக்க முன்வர வேண்டும்.இந்தப் பிரச்சினையில் மெத்தனப் போக்கை கைவிட்டு விட்டு துரிதமான நடவடிக்கை தேவை.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 22ம் தேதி மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவையாக உள்ளது. கேரளாவைப் போல இங்குள்ள அனைத்து அரசியல்கட்சிகளும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை வைத்தது தொடர்பாக உள்ளூர் மக்களிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை. பெரியார் சிலையை அங்கு யாரும்ஆட்சேபிக்கவில்லை. ஆனால் உச்சநீதிமன்றம் வரை சென்றும் ஏமாற்றமே மிஞ்சியவர்கள்தான் இதை பெரிதுபடுத்தி விஷமிகளைத் தூண்டி விட்டுவருகிறார்கள் என்றார் வீரமணி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications