திமுக ஆதரவு அதிகரிப்பு-தேமுதிகவை விடபின் தங்கும் அதிமுக: லயோலா கருத்து கணிப்பு
சென்னை:சட்டசபைத் தேர்தலின்போது காணப்பட்டதை விட தற்போது திமுக அரசுக்கு ஆதரவுஅதிகரித்திருப்பதாக சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இப்போது சட்டசபைக்கு தேர்தல் நடந்தால் திமுகவுக்கு வாக்களிப்போம் என 39.7சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு வாக்களிப்போம் என 21.4 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு வாக்களிப்போம் என 19.4சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியிலிருந்து கணிசமான அளவு திமுக, தேமுதிகவுக்கு மாறியுள்ளது கருத்துக் கணிப்பில்தெரிய வந்துள்ளது.
அதேசமயம், சிக்குன்குனியா, மழை வெள்ள நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் திமுகஅரசின் மீது பரவலாக அதிருப்தி காணப்படுவதும் தெரியவந்துள்ளது.
லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை மாணவர்கள் தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தினர். கடந்த 6 மாதங்களில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்துமக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளை துறைத் தலைவர் பேராசிரியர் ராஜநாயகம் இன்றுசெய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
திமுக அரசு 5 ஆண்டு காலம் ஆட்சியில் நீடிக்கும் என 53.5 சதவீதம் பேர் கருத்துதெரிவித்துள்ளனர்.
இன்று தேர்தல் நடந்தால் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 48 சதவீதம் பேர்கருத்து தெரிவித்துள்ளனர். இதில் திமுகவுக்கு மட்டும் 39.7 சதவீதம் பேரின் ஆதரவுகிடைத்துள்ளது.
அதிமுகவுக்கு வாக்களிப்போம் என தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 23.9 சதவீதமேஆகும்.
2 ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்திற்கு 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதேபோல நுழைவுத் தேர்வு ரத்து முடிவு, நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழிஉள்ளிட்ட திமுக அரசின் பல்வேறு முடிவுகளுக்கு பெருவாரியான ஆதரவுகாணப்படுகிறது.
கடந்த 6 மாதங்களில் திமுக அணியின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துள்ளதாககருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அதேசமயம் விலைவாசி உயர்வை தடுக்க திமுக அரசு தவறி விட்டதாக பரவலாககருத்து நிலவுகிறது. விலைவாசி உயர்வை திமுக அரசு தடுக்கத் தவறி விட்டதாக 46.1சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விரைந்து செயல்பட தமிழக அரசு தவறிவிட்டதாக 52.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கேபிள் டிவியை அரசே கையகப்படுத்தும்சட்டத்தை திமுக அரசு கைவிட்டது தவறு என்று 51.3 சதவீதம் பேர் கருத்துதெரிவித்துள்ளனர்.
இதேபோல சிக்குன்குனியாவை கட்டுப்படுத்தத் தவறியது, மழை நிவாரணப்பணிகளை விரைந்து மேற்கொள்ளாததற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
இலவச கலர் டிவி திட்டத்திற்கு 46.8 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதேபோல, இலவச காஸ் அடுப்பு, 2 ஏக்கர் நிலம், கைதிகளுக்கு கோழிக்கறி ஆகியதிட்டங்களுக்கும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து 49.2 சதவீதம் பேர் மகிழ்ச்சியையும், 24.1 சதவீதம் பேர் கோபத்தையும்வெளிப்படுத்தியுள்ளனர்.
சத்துணவில் வாரம் இரண்டு முட்டை வழங்கும் திட்டத்திற்கு 61.3 சதவீத ஆதரவும், ஏழைகளுக்கு திருமண உதவித்திட்டத்திற்கு 52.5 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.
ஆட்சியின் செயல்பாடு மிகவும் திருப்தியாக இருப்பதாக 45.2 சதவீதம் பேரும், நன்றாக இருப்பதாக 21.2 சதவீதம் பேரும்,பரவாயில்லை என 16.7 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். மோசம் என்று 16.9 சதவீதம் பேர் மட்டுமே கருத்துதெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியாக அதிமுகவின் செயல்பாடு மோசம் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 36.4 சதவீதம் பேர்நின்றாக இருப்பதாகவும், 42.2 சதவீதம் பேர் மோசம் எனவும் கூறியுள்ளனர்.
தமிழக அரசியலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றான சக்தியாக தேமுதிக நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. இரு கட்சிகளுக்கும்மாற்றாக தேமுதிக உருவாகும் என 63.5 சததவீதம் பேர் கருத்து ரிெ>வித்துள்ளனர். இறுதி வரை அக்கட்சி தனித்தே செயல்படவேண்டும் என 60 சதவீதம் பேர் கருத்து தெ>வித்துள்ளனர்.
இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு ஓட்டு என்ற கேள்விக்கு தேமுதிகவுக்கு 21.4 சதவீதம் பேர் ஆதரவு தெ>வித்துள்ளனர். இதுஅதிமுகவை விட 2 சதவீதமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் வாக்கு வங்கியிலிருந்து கணிசமான அளவு தேமுதிகவுக்கு மாறியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 4.5 சதவீதமும், பாமகவுக்கு 1.6%, மதிமுகவுக்கு 1.0%, இடதுசாரிகள் 2.1 சதவீதம் என்ற அளவிலும் வாக்குவங்கி இருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
லாட்டரியை அனுமதிக்கக் கூடாது, மது விலக்கை அமல்படுத்த வேண்டும், சென்னையில் துணை நகரங்களை உருவாக்கவேண்டும், சிறப்பு பொருளாதார மண்டலங்கைள உருவாக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தல், கேளிக்கை வரி சலுகை ஆகியவற்றுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில்வரவேற்பு இல்லை.
எம்.ஜி.ஆர். நம்பர் ஒன்:
தமிழகம் இதுவரை கண்ட முதல்வர்களிலேயே எம்.ஜி.ஆர்.தான் பெஸ்ட் எனவும் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில்பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.
எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக 44.2 சதவீதம் பேரும், காமராஜருக்கு 31 சதவீதம் பேரும், கருணாநிதிக்கு 14.5 சதவீதம் பேரும்,ஜெயலலிதாவுக்கு 4.2 சதவீதம் பேரும், அண்ணாவுக்கு 3.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஜினிக்கு தொடர்ந்து செல்வாக்கு:
நடிகர்களில் ரஜினிக்குத்தான் இன்னும் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளது. ரஜினிக்கு 15.6 சதவீதமும், விஜய்க்கு 14.2சதவீதமும், விஜயகாந்த்துக்கு 12.6 சதவீதமும், அஜீத்துக்கு 11.1 சதவீதமும், கமலுக்கு 8.3 சதவீதம் பேரும் ஆதரவுதெரிவித்துள்ளனர்.
ஆசின் முன்னிலை:
நடிகைகளில் ஆசினுக்கு 14.1 சதவீதம் பேரும், ஜோதிகாவுக்கு 11.8 சதவீதம் பேரும், ஸ்னேகாவுக்கு 8.9 சதவீதம் பேரும்,த்ரிஷாவுக்கு 7.5 சதவீதம் பேரும், சிம்ரனுக்கு (இன்னுமா?) 6.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல தமிழக மக்களிடையே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. அதாவது90.4 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.
அதேசமயம் கடவுள் மறுப்பு மற்றும் நாத்திக கொள்கைகளும் தவறில்லை என 26 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்தகொள்கைகள் தங்களுக்கு ஏற்புடையதல்ல என 74 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
சரத்குமார் கட்சி தொடங்குவார், நாடார் சமுதாயத்தினரையே அவர் அதிகம் நம்பியிருப்பார் எனவும் பலர் கருத்துதெ>வித்துள்ளனர். அதேசமயம், ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டார் என்றும் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிய வந்ததாக ராஜநாயகம் கூறினார்.












Click it and Unblock the Notifications