சோனியா விருந்து-கருணாநிதி இன்று டெல்லி பயணம்
சென்னை:ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு கூட்டணித் தலைவர்சோனியா காந்தி அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர்கருணாநிதி இன்று டெல்லி செல்கிறார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், கூட்டணி கட்சிகளின்நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சோனியா காந்தி விருந்தளிக்கிறார். நாளை இந்தவிருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று மாலை 5 மணிக்குவிமானம் மூலம் டெல்லி செல்கிறார். சோனியா காந்தியை சந்திக்கும்போதுமுல்லைப் பரியாறு அணை பிரச்சினை தொடர்பாக அவருடன் பேசுவார் என்றுதெரிகிறது. பிரதமரிட.ம் அவர் இதுகுறித்து பேசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு 22ம் தேதி சென்னை திரும்புகிறார்கருணாநிதி.
அணு ஒப்பந்தம் கருணாநிதி பாராட்டு:
இதற்கிடையில் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தால் நாட்டின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதை முதல்வர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான திட்டப் பணிகளுக்குகேடு ஏற்படாது என பிரதமர் கூறியுள்ளது ஒரு இனிய செய்தியாகும்.
ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் சிறப்பான முறையில் அமல்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டால்,உலகம் அமைதியாக வாழும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், பிடல் காஸ்ட்ரோவின் உடல் நலம் தேறி வருவதாகவும், அவருக்குபுற்று நோய் இல்லை என்றும் தெரிய வந்து நான் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்தேன்.
காஸ்ட்ரோவுக்கு புற்று நோய் என்று செய்தி வெளியானபோது நான் அதிர்ந்து போனேன். ஆனால் அவருக்குப் புற்று நோய் இல்லை என்ற செய்தியைபடித்தபோது நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications