மறுபடியும் பேசுவோமா? குசும்பு கேரளா
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மறுபடியும் பேச கேரளா தயாராகஇருப்பதாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த அதிமுகஆட்சிக்காலத்தில் பல சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போதுபொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பலமுறைகேரளாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனாலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் தமிழகத்திற்குபெரும் விமோச்சமானமாக வந்து சேர்ந்தது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. அணையின்உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் அதை ஏற்காத கேரள அரசு தீர்ப்பை முடக்கும் வகையில் சட்டத்திருத்த்ததைக் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தை மூலம் இரு மாநிலஅரசுகளும் சுமூகத் தீர்வு காண அறிவுறுத்தியது. இதையடுத்து சென்னையில் நடந்தஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்பேசி கேரள முதல்வருடன்பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ்முன்னிலையில், முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர் அச்சுதானந்தனும்பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வழக்கம் போல கேரள அரசு சம்பந்தமேஇல்லாமல் பிடிவாதப் போக்கைக் கடைப்பிடித்ததால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து இரு மாநில அமைச்சர்களும் சந்தித்துப் பேச முடிவுசெய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகனும், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரனும் டெல்லியில்மத்திய அமைச்சர் ஜோஸ் முன்னிலையில் சந்தித்துப் பேசினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போதும் தொடர்ந்து புது அணை கட்டணும், புது அணைகட்டணும் என்ற ஒரே பல்லவியையே கேரளா பாடியதால் பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்தது.
வேறு வழியில்லாததால் உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம் என முதல்வர்கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இன்றுசெய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன்,இந்தப் பிரச்சினை தொடர்பாக மறுபடியும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்ததயாராக உள்ளோம்.
உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் கோரியதால்தான் தமிழகத்துடன் பேச்சுவார்த்தைக்குசம்மதித்தோம். எங்களது நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை. புதிய அணைகட்டுவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றார்.
பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண நினைத்தது தமிழகம். ஆனால் பேசிப்பேசியே காலம் கடத்த வேண்டும் என்பது கேரளாவின் நிலைப்பாடு. மொத்தத்தில்முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளின் நிலைதான்பெரும்பாடாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications