புற்றுநோய் சிறுமிக்கு ஆறுதல் தந்த சானியா
பெங்களூரு:பெங்களூரு வந்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4 வயதுசிறுமியை சந்தித்து அந்த சிறுமிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
பெங்களூரு நகரைச் சேர்ந்தவர் பிபி ஹஜீர். 4 வயது சிறுமியான பிபி, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்.இருந்தும் டென்னிஸ் மீது தீராத பற்றுக் கொண்டிருந்தார் பிபி.
![]() |
எதிர்காலத்தில் நான் சானியா மிர்ஸா போல ஆடி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்று அடிக்கடிகூறுவாராம் பிபி. மேலும், சானியாவை சந்திக்க வேண்டும் என்பதும் இந்த குட்டிச் சிறுமியின் தீராத ஆசையாகஇருந்து வந்தது.
இந்த நிலையில் பெங்களூரு வந்த சானியாவிடம் பிபி குறித்து தெரிவிக்கப்பட்டது. வியப்படைந்த சானியாவும்,பிபியை சந்திக்க நான் தயார் என்று கூறியுள்ளார். இதையடுத்து பிபி தனது பெற்றோருடன், சானியா தங்கியுள்ளஹோட்டலுக்கு வந்தார்.
பிபியைப் பார்த்ததும் சானியா அவரிடம் வாஞ்சையுடன் நெருங்கி தூக்கி வைத்துக் கொஞ்சினார். உனது பெயர்என்ன, என்னை மாதிரி நீயும் விளையாடுவாயா என்று கேட்டு அந்த சிறுமியை இன்பக் கடலில் ஆழ்த்தினார்.
![]() |
பிபியுடன் சில நிமிடங்களை செலவிட்டார் சானியா. ஆனால் பிபிக்கோ அது பல நாள் கனவு நிறைவேறியதருணங்கள் என்பதால் படு குஷியாக சானியாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர்சானியாவிடமிருந்து விடைபெற்றுச் சென்றார் பிபி.
பின்னர் செய்தியாளர்களிடம் சானியா கூறுகையில், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறு குழந்தைகளுக்குக் கூடநான் ரோல் மாடலாக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
பிபி விரைவில் குணமடைய வேண்டும். இதற்காக இறைவனிடம் நான் வேண்டிக் கொள்கிறேன் என்றார் சானியா.
இன்னொரு சானியாவாக பிபி உருவாக நாமும் கூட வேண்டிக் கொள்வோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications