இந்தியாவை முட்டாளாக்கும் இலங்கை: ஈழ. எம்பிக்கள்
சென்னை:பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று கூறிக் கொண்டே, மறுபக்கம் இனப்படுகொலையை தீவிரமாக நடத்திஇந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை இலங்கை அரசு முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது என்று இலங்கையைச்சேர்ந்த தமிழ் எம்.பிக்கள் கூறியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்கள் சம்பந்தன், சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன்னம்பலம்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் ஏற்பாடு செய்திருந்தார். முதல்வரைச்சந்தித்த பின்னர் ஐந்து எம்.பிக்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், இலங்கை அரசின் பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள்உள்ளிட்டவை குறித்து முதல்வர் கருணாநிதியிடம் விரிவாக எடுத்துரைத்தோம்.
தமிழ் மக்கள் உணவின்றியும், மருந்தின்றியும் படும் இன்னல்களை அவரிடம் விளக்கினோம். அப்பாவித் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவதையும், இந்திய அரசு இதைத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும்,யாழ்ப்பாணம் சாலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் முதல்வரிடம் வேண்டினோம்.
ஈழத் தமிழர்கள் இன்னல் தீர தன்னால் ஆன உதவிகளை, முயற்சிகளை நிச்சயம் செய்வதாக முதல்வர்உறுதியளித்தார். முதல்வரை சந்தித்ததைப் போல பிற அரசியல் தலைவர்களையும், மத்திய அரசையும்,எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம்.
யாழ்ப்பாணம் பகுதியில் மட்டும் நான்கரை லட்சம் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமையில் வாடிவருகின்றனர். அங்குள்ள நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடி விட்டது. மருந்து இல்லை, சாப்பிட உணவுப்பொருள் கிடைப்பதில்லை. தினசரி குறைந்தது 50 தமிழ்ப் பெண்கள், இளைஞர்களை இலங்கை ராணுவம்கொன்று குவித்து வருகிறது.
ராஜபக்ஷே அதிபராக ஆன பிறகு கிட்டத்தட்ட 4000 தமிழர்களைக் கொன்று குவித்துள்ளார். அகதிகளாக 16,000பேர் வரை தமிழகத்திற்கு வந்துள்ளனர். இனிமேலும் இலங்கை அரசுடன் பேசுவதில்லை என்ற முடிவுக்கு நாங்கள்வந்து விட்டோம்.
மனிதாபிமானமற்ற முறையில் இலங்கை அரசு நடந்து கொள்கிறது. அடிப்படையான சிறு மனித உரிமைகளைக்கூட தர மறுக்கிறது. பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்று கூறிக் கொண்டே, இனப்படுகொலையைஅரங்கேற்றி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை ஏமாற்றி முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது இலங்கை.
தமிழர்களைக் கொன்று குவிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை ஒடுக்கி விடலாம், பலவீனப்படுத்தி விடலாம்என்பது இலங்கை அரசின் எண்ணம்.
கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் வேதனைப்பட்டு விட்டோம். இந்த வேதனையைப் புரிந்து கொண்டுஆக்கப்பூர்வமான வழியில், இந்திய அரசு தனது கருத்தை தெளிவாக, உறுதியாக கூறினால்தான் இலங்கைப்பிரச்சினையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இந்தியா இனியும் வெறும் பார்வையாளராக இருந்து இந்தப் பிரச்சினையை அணுகக் கூடாது என்று அவர்கள்தெரிவித்தனர்.
பாலசிங்கத்திற்கு சென்னையில் இரங்கல் கூட்டம்:
இதற்கிடையில் மறைந்த விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்திற்கு இன்று சென்னையில் இரங்கல் கூட்டம்நடைபெறுகிறது.
தென்னவன் கலைமன்றம் இந்த இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சிக் கூட்டமாக இது நடைபெறுகிறது.
பெரியார் திடலில் இன்று மாலை நடைபெறும் இக்கூட்டத்தில், தி.க. தலைவர் கி.வீரமணி, கவிஞர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள்எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை, சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குநர்கள் சீமான்,செல்வபாரதி, அன்பு தென்னரசன், டாக்டர் வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications