கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை காசிபுரம் பகுதியில் கடலில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.இன்னொரு மாணவரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

காசிமேடு பகுதியில் சமீபத்தில் மீனவர் குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணஉதவிகளை வழங்க அதிமுக மீனவர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் ஏற்பாடுசெய்திருந்தார்.

இது தொடர்பான நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. அப்போது சில மீனவர்கள் ஜெயக்குமாரிடம் வந்து,கடற்கரையில் மாணவர்கள் சிலரின் சீருடைகள் கிடப்பதாகவும், ஆனால் மாணவர்கள் யாரும் இல்லை எனவும்தெரிவித்தனர்.

இதையடுத்து கடற்கரைக்கு ஜெயக்குமாரும், மீனவர்களும் விரைந்தனர். படகில் சென்று கடலுக்குள் தேடுமாறுஜெயக்குமார் கூறவே மீனவர்கள் கட்டுமரங்களில் ஏறி கடலுக்குள் சென்றனர். ஜெயக்குமாரும் ஒரு படகில் ஏறிக்கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினார்.

சில நிமிடத் தேடலில் ஒரு மாணவரின் உடல் கடலில் மிதந்தபடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தஉடலை மீனவர்கள் மீட்டனர். தொடர்ந்து மேலும் 2 மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. இதையடுத்துதுறைமுகம் போலீஸாருக்குத் தகவல் போனது.

போலீஸார் விரைந்து வந்து 3 உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிச்சீருடையை வைத்து அது தண்டையார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் மாணவர்களின் அடையாளமும் தெரிய வந்தது.

பலியான மாணவர்கள் சுரேந்திரன், வேல்முருகன், பிரசாந்த் என்பதும், அப்பள்ளியில் 10 வது படித்து வந்தனர்என்பதும் தெரிய வந்தது. 3 பேரும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அடிக்கடி இப்பகுதிக்குவந்து கடலில் குளிப்பது வழக்கமாம்.

குறிப்பாக சனிக்கிழமைகளில்தான் அதிகம் வருவார்களாம். அன்று பள்ளிக்கூடம் இருந்தாலும் எப்படியாவதுவந்து விடுவார்களாம். அவர்களோடு மேலும் ஒரு மாணவனும் குளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தமாணவனின் கதி தெரியவில்லை.

3 மாணவர்களின் பெற்றோர்கள், சக மாணவர்கள், உறவினர்கள் உடல்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்டான்லிமருத்துவமனையில் கூடி கதறி அழுதது பார்ப்போரை உருக வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+