அமைச்சர் முன் தீக்குளிக்க முயன்ற பெண்
![]() |
டெல்லி:டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்சந்திப்பின்போது ஒரு பெண் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.பெட்ரோலியத் துறை மூத்த அதிகாரிகளும் பேட்டியின்போது உடன் இருந்தனர்.
பேட்டி முடியும் நேரத்தில் லட்சுமி என்ற பெண் அங்கே வந்தார். ஆவேசமாக வந்த அவர், நான் கொடுத்த புகார்குறித்து பெட்ரோலியத் துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து விளக்குங்கள் என்று கோபமாககூறினார்.
இதைக் கேட்ட அமைச்சர், இதுபோன்ற தனிப்பட்ட கோரிக்கைகளை இங்கே சொல்லக் கூடாது. சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம்தான் புகார் கூற வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து அந்தப் பெண் தரையில் அமர்ந்து முழங்கால்களைப் பிடித்தபடி கதறி அழத் தொடங்கினார். பின்னர்தன்னுடன் எடுத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாவலர்களும், பத்திரிக்கையாளர்களும் உடனடியாக அந்தப் பெண்ணிடிருந்து பெட்ரோல் கேனையும்,தீப்பட்டியையும் பறித்தனர். இந்த சம்பவத்தால் அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில்ஆழ்ந்தனர்.
பின்னர் லட்சுமியை போலீஸார் கைது செய்து அவர் மீது தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.
தற்கொலை முயற்சி ஏன்?
தற்கொலைக்கு முயன்ற லட்சுமியின் சகோதரர் ஹரீந்தர் சிங். இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்த அதிகாரி.கார்கில் போரின்போது இவர் வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து இவரது தந்தை பெயரில் பெட்ரோல் பங்க் நடத்த மத்திய அரசு உரிமம் வழங்கியது. இதைத்தொடர்ந்து ஹரீந்தர் சிங் குடும்பத்தினர், உ.பி. மாநிலம் அலிகாரில் பெட்ரோல் பங்க் அமைத்தனர்.
ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் ஒன்று இவர்களை மிரட்டி விரட்டி விட்டு பெட்ரோல் பங்க்கைக்கைப்பற்றிக் கொண்டது. இதனால் பெட்ரோல் பங்க்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து லட்சுமி, அமைச்சர் முரளி தியோராவை நேரில் சந்தித்து புகார் கொடுத்தார். தொடர்ந்து 9 முறைமுரளி தியோராவை அவர் நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றுதெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்து போன லட்சுமி, இன்று ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான்பத்திரிக்கையாளர்களை முரளி தியோரா சந்திக்க வந்தபோது தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து முரளி தியோரா கூறுகையில், தன்னை சிலர் சித்திரவதை செய்வதாகவும், பெட்ரோல் பங்க் நடத்தவிடாமல் தொந்தரவு செய்வதாகவும் இந்தப் பெண் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
9 பேர் குடும்பத்துக்கு பெட்ரோல் பங்க்:>
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த 9 பாதுகாப்புப்படையினரின் குடும்பங்களுக்கு பெட்ரோல் பங்க் நடத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முரளிதியோரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 9 வீரர்களின்குடும்பங்களுக்கும் பெட்ரோல் பங்க் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த வாஜ்பாய் அரசில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தாக்குதல் தினநிகழ்ச்சியின்போது இதுதொடர்பான உத்தரவுகள் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டன.
தற்போது பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வது, நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளைமேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பயனாளிகள் தரப்பிலிருந்து எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை. பெட்ரோலிய நிறுவனங்களைநிலத்தை ஆர்ஜிதம் செய்து, பெட்ரோல் பங்குகளை அமைத்து அவற்றை பயனாளிகளிடம் ஒப்படைத்து விடும்.
தற்போது 4 பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டு விட்டன. 2 பங்குகள் இந்த மாதத்திற்குள்ளும், 2 பங்குகள்அடுத்த மாதத்திற்குள்ளும் அமைக்கப்பட்டு விடும். மீதம் உள்ள ஒரு பங்குக்கான இடத் தேர்வு நடந்து வருகிறதுஎன்றார் முரளி தியோரா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications