சென்னை வந்த இலங்கை வீரர்களுக்கு எதிர்ப்பு
சென்னை:மும்பையில் கராத்தே பயிற்சிகாக இன்று காலை சென்னைக்கு விமானம் மூலம் வந்தஇலங்கை ராணுவ வீரர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கொழும்பிலிருந்து இன்று அதிகாலை வந்த தனியார் விமானத்தில் 18 இலங்கைவீரர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அங்கிருந்த சிலர் இலங்கை ராணுவத்தைஎதிர்த்தும், அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் கூறிகோஷமிட்டனர்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராணுவவீரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது லிய நாயககே என்பவர்தலைமையில் வந்த அந்த ராணுவ வீரர்கள் 18 பேரும் கராத்தேவில் பயிற்சிபெற்றவர்கள் என்றும் மேல் பயிற்சிக்காக மும்பை செல்ல வந்தனர் என்பது தெரியவந்தது.
மும்பையில் 2 நாட்கள் தங்கி அவர்கள் பயிற்சி பெறவுள்ளனராம். இதையடுத்துபோலீஸார் அவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றி சென்னையில் உள்ளஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். இன்று இரவு அவர்கள்மும்பைக்கு செல்லவுள்ளனர்.
இலங்கைக்கு எந்தவிதமான ராணுவப் பயிற்சியும், உதவியும் அளிக்கப்பட மாட்டாதுஎன மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் சமீபத்தில் புனே மற்றும் சண்டிகரில் இலங்கைகடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதுநினைவிருக்கலாம்.
இப்போது கராத்தே பயிற்சிஎன்ற பெயரில் ஏதோ ஒளிவு மறைவு நடப்பதாகத்தெரிகிறது.
முழு போர் வெடிக்கும்: புலிகள் எச்சரிக்கை:
இலங்கை ராணுவம் தொடர்ந்து அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றி வந்தால் முழு அளவிலான போர் மூளுவதை தடுக்கமுடியாது என்று விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்கில் வாகரை பிராந்தியத்தில் ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்தின் தொடர்தாக்குதலால் அப்பாவித் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு வழியின்றி இவர்கள் ராணுவத்தின் வசம் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
கடந்த 2 வாரங்களில் மட்டும் 20,000 தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வாகரையிலிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அடர்ந்த வனப்பகுதி வழியாக உயிரைப் பணயம் வைத்து இவர்கள் இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
தமிழர்களை வெளியேற்றி விட்டு இப்பகுதியில் புலிகள் மீது கடும் தாக்குதலை நடத்த இலங்கை ராணுவம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படிநடந்தால் மிகப் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் என நார்வே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
இதற்கிடையே, இலங்கை ராணுவம் வாகரைப் பகுதியில் தங்கள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தால் முழு அளவிலான போர் வெடிப்பதை தவிர்க்க முடியாதுஎன்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை ராணுவத்தின் திட்டம் முழு அளவிலான போருக்கு எங்களைத் தள்ளுவதாக அமைந்துள்ளது.
இலங்கை அரசு போருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் இலங்கைத் தீவு மிகப் பெரிய அழிவை சந்திக்க நேரிடும் எனஎச்சரிக்கிறோம். மிகப் பெரிய போராக இது மாறும் எனவும் கூற விரும்புகிறோம்.
ஏற்கனவே சுனாமியால் தங்களது உடமைகளையெல்லாம் இழந்து விட்ட எமது மக்கள் இப்போது இருப்பிடங்களையும் விட்டு வெளியேற்றப்பட்டுவருகிறார்கள். சொல்லொணா துயரங்களை அவர்கள் சந்தித்து வருகிறார்கள்.
இலங்கை அரசின் மிகக் கொடூர இனப் படுகொலையே இது தவிர வேறு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார் தமிழ்ச் செல்வன்.
தற்போது கிழக்கில் உள்ள வாகரைப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அகற்ற ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கிழக்கில்விடுதலைப் புலிகளை பலவீனமாக்க முடியும் என ராணுவம் கணக்குப் போடுகிறது.
விடுதலைப் புலிகளை கிழக்கிலிருந்து அகற்றி விட்டு, உள்ளூர் தேர்தலை அறிவித்து அங்கு கருணா பிரிவினரை அதிகாரத்திற்கு வர வைத்து அதன் மூலம்புலிகளுக்கு நெருக்கடி தர இலங்கை அரசு எண்ணுவதாக கூறப்படுகிறது.பாலசிங்கத்திற்கு சென்னையில் புகழாஞ்சலி:
இதற்கிடையே மறைந்த விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்திற்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் புகழாஞ்சலிசெலுத்தப்பட்டது.
![]() |
தென்னவன் கலை மன்றம் சார்பில், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் பாலசிங்கம் இரங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.க. தலைவர் கி.வீரமணி, கவிஞர்கனிமொழி, செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி., செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ.உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர்.
கனிமொழி பேசுகையில், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை, தத்துவங்களை உலக நாடுகளிடையே எடுத்துச் சென்ற பெருமை பாலசிங்கத்திற்குஉண்டு. தமிழர்களின் பெருமைகளையும், வலிகளையும், துயரங்களையும் உலக மக்களிடையே கொண்டு சென்றார்.
அவர் போர்க்களத்தில் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. ஆனால் அவரே ஒரு ஆயுதமாக விளங்கினார். ஈழத் தமிழர்களது குரலாக, மொழியாகவிளஙகியவர் பாலசிங்கம். பாலசிங்கம் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்.அவரைப் போல மக்களின் நியாயங்களை உலக நாடுகளிடையே கொண்டு செல்லபல குரல்கள் உருவாக வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் ஒரு குரலாக மாற வேண்டும். அதற்காக இந்த நேரத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். அந்த மக்களுடன் நாமும் இணைந்து கொள்ளவேண்டும் என்றார் கனிமொழி.
தி.க. தலைவர் கி.வீரமணி பேசுகையில், அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும்ஒரு பேராளிகள் இயக்கம்தான் விடுதைலப் புலிகள் இயக்கம், அது பயங்கரவாதஇயக்கம் அல்ல என்பதை, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் இல்லை என்பதைஉலக நாடுகளுக்கு உணர்த்தியவர் பாலசிங்கம்.
விடுதலைப் புலிகள் பற்றி எப்போதெல்லாம் தவறாக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறதோ அப்போதெல்லாம் அதை தெளிவுபடுத்தி, நியாயங்களை விளக்கி அந்தப்பிரசாரத்தை முறியடித்தவர் பாலசிங்கம் என்றார் வீரமணி.
முன்னதாக ஈழத் தமிழர்கள் போராட்டம் பற்றிய குறுந்தகட்டை வீரமணி வெளியிடஅதை கனிமொழி பெற்றுக் கொண்டார்.
இந் நிலையில் இன்று மதுரை வந்த கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்றுஅங்குள்ள தமிழர்கள் நினைத்தால் அதுதான் தீர்வாக இருக்க முடியும். அங்குள்ள தமிழர்கள் இந்தியாவில் இருந்துசென்றவர்கள்தான். எனவே அவர்கள் நலன் குறித்து தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு குறித்து ஒத்த கருத்துள்ளவர்களை திரட்டி வரும் ஜனவரி 19ம் தேதி பேரணி நடத்த உள்ளோம் என்றார்.













Click it and Unblock the Notifications