சிறுவன் மீது வெந்நீர் ஊற்றி சித்திரவதை: 3 பேர் கைது
சென்னை:சென்னை அருகே 11 வயது சிறுவனை வீட்டு வேலை செய்யச் சொல்லி சித்திரவதை செய்த ஆதரவற்றோர் இல்லநிர்வாகி, அவரது மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்தை ராமநாதன் என்பவர் நடத்தி வருகிறார்.இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களது மகன் கார்த்திகேயன்.
இங்கு 19 பேர் சிறார்கள் தங்கியுள்ளனர். இவர்களை தங்களது வீட்டு வேலைக்கு கார்த்திகேயன் குடும்பத்தினர்பயன்படுத்தி வந்துள்ளனர். சரியாக வேலை செய்யாவிட்டால் அடித்து, உதைத்தும், சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த காப்பகத்தில் தங்கி 6வது படித்து வந்த பாண்டியன் (11) என்ற சிறுவனை கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர். உடல் நலம் சரியில்லாததால் பாண்டியன் அந்த வேலையை செய்யவில்லைஎன்று தெரிகிறது.
இதையடுத்து கோபமடைந்த ராமநாதன், அவரது மனைவி, மகன் ஆகியோர் சுடு தண்ணீரை எடுத்து பாண்டியன்மீது ஊற்றியுள்ளனர். இதில் பாண்டியனின் உடல் வெந்து போனது.
இதையடுத்து காப்பகத்தில் இருந்தவர்கள் பாண்டியனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துசேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டியனிடம்வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து ராமநாதன், சீதாலட்சுமி, கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications