ஜங் சக் அடிக்க வெட்கப்படவில்லை-காங்கிரஸ்
![]() |
கொடைக்கானல்:மகளிர் சுய உதவிக் குழுகள் அரசியலுக்கோ, தேர்லுக்கோ பயன்படுத்துவதற்காகஉருவாக்கப்பட்டவை அல்ல, பெண்கள் தன்னம்பிக்கையுடன் சொந்த காலில் நிற்கவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை என உள்ளாட்சிதுறை அமைச்சர்மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொடைக்கானலில் புதிய பஸ் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி ஸ்டாலின்பேசியதாவது,
திமுக ஆட்சிகுக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டது.வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறது.
கோட்டையில் இருந்து கொண்டே ஊட்டியில் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும்பழக்கம் ஜெயலலிதாவுக்கு இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அப்படியெல்லாம்நடக்காது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி துறையின் ஆய்வுக் கூட்டம் நடந்து வருகிறது.கொடைக்கானலில் ரூ.4.87 கோடி செலவில் அமைய உள்ள புதிய பஸ்நிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தப் பணி அடுத்த ஆண்டுக்குள்முடிவடையும்.
அதிமுக ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டதாக கூறித்திரிகிறார்கள். 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் முதல் முறை தர்மபுரிமாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
சுய உதவிக் குழுக்கள் அரசியலுக்கோ, தேர்லுக்கோ பயன்படுத்த அல்ல. பெண்கள்தன்னம்பிக்கையுடன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகஏற்படுத்தப்பட்டவை. ஆனால் அதிமுக ஆட்சியில் இடைத் தேர்தலில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தினார்கள்.
இலவச கலர் டிவி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும்பிப்ரவரி மாதத்துக்குள் 25 லட்சம் கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு விடும். இதற்காகஅமைக்கப்பட்ட குழுவில் அதிமுக, மதிமுக, தேமுதிக கட்சியினரை தவிர அனைத்துகட்சியினரும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், மக்களுக்கு இலவச டிவிகிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றார் ஸ்டாலின்.
இந்த விழாவில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தண்டபாணி,
நாங்கள் சட்டசபையில் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதாக கூறுகின்றனர். நல்ல இசைக் கச்சேரியில் நாயணம் வாசிப்பவருக்கு ஏற்றவகையில் மேளம் வாசிக்க வேண்டும். ஒத்து ஊத வேண்டும். அப்போது தான் அந்த கச்சேரி கேட்பதற்கு இனிமையாகஇருக்கும். அதைப்போல திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் மின்னல் வேகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. அதனால்நாங்கள் பாராட்டுகிறோம்.
அப்போது தான் மேலும் மேலும் பல திட்டங்களை அவர்கள் ஊக்கத்துடன் செயல்படுத்த முடியும். அதிமுக ஆட்சியில் நாங்கள்ஜால்ரா அடிக்கவில்லை. அக் கூட்டணியில் ஒத்து ஊதிக் கொண்டிருந்த திருமாவளவன் எங்கள் பக்கம் வந்துவிட்டார். காரணம்,அங்கு நாயணம் வாசிப்பவர் சரியில்லை. இங்கு (திமுக) நாயணம் வாசிப்பவர் நன்றாக வாசிக்கிறார். நாங்களும் ஒத்துஊதுகிறோம். ஜால்ரா அடிக்கிறோம். இதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை, வேதனைப்படவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications